சிஆர்பிஎப் வீராங்கனைகள்: நக்சல்களை ஒழிக்க சபதம்

By செய்திப்பிரிவு

நாட்டில் சிஆர்பிஎப் படையில் மகிளா (பெண்கள்) பிரிவு தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த பிரிவில் பயிற்சி பெற்ற பெண் வீராங்கனைகள் பல் வேறு அசம்பாவிதங்களின் போது சிறப்பாக செயல்பட்டு நிலை மையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் அஜ்மிரில் சிஆர்பிஎப் பயிற்சி முடித்த ‘232 மகிளா பட்டாலியனை’ சேர்ந்த 567 வீராங்கனைகளின் அணிவகுப்பு நேற்று நடந்தது. இவர்களுக்கு கடந்த ஆண்டு மே மாதம் 11-ம் தேதி தொடங்கி தொடர்ந்து 44 வாரங்கள் கடும் பயிற்சி அளிக்கப்பட்டது. துப்பாக்கிச் சுடுதல் பயிற்சி, அடர்ந்த காடு களில் வாழ்வதற்கான பயிற்சி, வரைபடங்களை புரிந்து கொண்டு தேடுதல் வேட்டையில் ஈடுபடுவது, கராத்தே உட்பட பல்வேறு கடும் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

பயிற்சி முடித்த 567 வீராங் கனைகள் மிடுக்குடன் அணி வகுப்பு நடத்தினர். பின்னர், நாட்டில் இருந்து நக்சல் வன் முறைகளையும் தீவிரவாதத்தை யும் ஒழிப்போம் என்று அனைவரும் சபதம் ஏற்றனர். இந்தப் படை பிரிவு குறிப்பாக நக்சல் மற்றும் தீவிரவாத ஒழிப்புக்காகவே தொடங்கப்பட்டது குறிப்பிடத் தக்கது. பயிற்சி முடித்த வீராங் கனை களை சிஆர்பிஎப் டைரக்டர் ஜெனரல் கே.துர்காபிரசாத் பாராட்டினார். நக்சல்கள் ஒழிப்பில் எந்த அசாதாரண சூழ்நிலையை யும் சந்திப்போம் என்று வீராங் கனைகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

21 mins ago

தமிழகம்

6 mins ago

வாழ்வியல்

30 mins ago

தமிழகம்

46 mins ago

ஆன்மிகம்

4 mins ago

கருத்துப் பேழை

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

உலகம்

1 hour ago

சினிமா

2 hours ago

வலைஞர் பக்கம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்