கான்பூர் கலவரத்தில் கைதானவருக்கு பிஎப்ஐ அமைப்புடன் தொடர்பு?

By செய்திப்பிரிவு

கான்பூர்: உத்தரப் பிரதேசம் கான்பூரில் உள்ள பரேடு பகுதியில் சர்ச்சைக்குரிய வகையில் செய்தி பரப்பப்பட்டதால், கடந்த 3-ம் தேதி இரு பிரிவினர் இடையே கலவரம் ஏற்பட்டது. இதில் 12 பேர் காயம் அடைந்தனர்.

இந்த கலவரத்துக்கு மூளையாக செயல்பட்டது ஹயத் ஜாபர் ஹஸ்மி மற்றும் அவரது 3 கூட்டாளிகள்தான் என போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. லக்னோவில் ஹஸ்ரத்கன்ஜ் என்ற இடத்தில் பதுங்கியிருந்த அவர்களை போலீசார் கைது செய்தனர். கான்பூர் வன்முறை தொடர்பாக 800-க்கும் மேற்பட்டோர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மொத்தம் 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து கான்பூர் போலீஸ் கமிஷனர் வி.எஸ். மீனா கூறும்போது, ‘‘கான்பூர் கலவரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் மற்றும் குண்டர்கள் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும். முக்கிய குற்றவாளி ஹயத் ஜாபர் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா (பிஎப்ஐ) அமைப்புடன் தொடர்புள்ளதா என விசாரிக்கப்படும்.மவுலான மெகத் அலி ஜாகர் ரசிகர்கள் சங்கத்தின் தலைவராக ஹயத் ஜாபர் உள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டங்களிலும் இவருக்கு தொடர்பு உள்ளது. கான்பூரில் கலவரத்தை ஏற்படுத்த ஹயத் மற்றும் அவரது கூட்டாளிகள் ஜாவேத் அகமது கான், ராகில் கான், முகமது சுபியன் ஆகியோர் சதி செய்துள்ளனர்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

52 mins ago

சினிமா

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

5 hours ago

வலைஞர் பக்கம்

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

7 hours ago

ஜோதிடம்

6 hours ago

மேலும்