வீடுகளில் தங்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு வரியை குறைக்க மத்திய அரசு முடிவு

By ஆர்.ஷபிமுன்னா

நம் நாட்டின் சுற்றுலா மற்றும் வியாபார தலங்களுக்கு வருவோர் ஹோட்டல்களில் மட்டுமின்றி, வீடுகளிலும் தங்குவதற்கு அனு மதிக்கப்படுகின்றனர். படுக்கை வசதி மற்றும் காலை சிற்றுண்டி யுடன் கூடிய தங்குமிடத்துக்கு ஒரு குறிப்பிட்ட தொகை வாடகையாக வசூல் செய்யும் முறை மத்திய அரசால் பல ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டது.

உள்ளூர்வாசிகள் தங்கள் வீடு களில் ஓரிரு அறைகளை சுற்றுலாப் பயணிகளுக்கு ஒதுக்கி, நாள் அடிப்படையில் வாடகை வசூல் செய்து வருகின்றனர். இதற்காக வீட்டு உரிமையாளர்கள் மத்திய அரசிடம் அதற்கான உரிமம் பெறு வதுடன் ஹோட்டலை விட சற்று குறைவான தொகையை வரியாக செலுத்தி வருகின்றனர். இதுபோன்ற வசதி அளிப்பவர் களுக்கு மத்திய சுற்றுலா அமைச்சகம், உரிமம் பெறும் முறை களை தளர்த்துவதுடன், வரி களையும் குறைக்க முடிவு செய் துள்ளது. இதற்கு, நாடு முழுவதி லும் ஹோட்டல்களின் எண்ணிக்கை போதிய அளவு இல்லாததே முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

இது குறித்து ‘தி இந்து’விடம் மத்திய சுற்றுலா வளர்ச்சி அமைச்சக அதிகாரிகள் வட்டாரம் கூறும்போது, “வீடுகளில் தங்கும் முறை இல்லை எனில் நாட்டில் வெளியூர் சென்று தங்குவோருக்கு இடப்பற்றாக்குறை பல லட்சம் எண்ணிக்கையில் ஏற்பட்டு விடும். வர்த்தகப் பகுதிகளில் நிலத்தின் விலை பல மடங்கு உயர்ந்து விட்டதால் புதிய ஹோட்டல்கள் திறக்கப்படுவதும் குறைந்து வருகிறது. எனவே வீடுகளில் தங்கும் முறையை ஊக்கவிக்க இதுபோல் சில சலுகைகளை அறிவிக்க முடிவு செய்துள்ளோம். மத்திய அரசின் புதிய சலுகையின்படி, சுற்றுலாப் பயணிகள் தங்கும் வீடுகளுக்கு குடிநீர், மின்சார கட்டணம் மற்றும் வீட்டு வரியை வியாபார ரீதியாக விதிப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட உள்ளது. இத்துடன் சேவை வரி விதிப்பையும் ரத்து செய்ய திட்டமிடப்பட்டு வருகிறது. ஆசியாவின் மற்ற நாடுகளில் சுற்றுலா மற்றும் வியாபாரத் தலங்களில் கடைப்பிடிக்கப்படும் முறையை ஆய்வு செய்து இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது” என்று தெரிவித்தனர்.

வழக்கமாக ஹோட்டல்களை விட இதுபோன்ற வீடுகளில் குறைந்த வாடகை வசூலிக்கப் படுகிறது. என்றாலும் ஹோட்டல் அளவுக்கு சுற்றுலாப் பயணிகளை இவை கவருவதில்லை. எனவே இந்தமுறையை இணையதளம் உட்பட பல்வேறு வகையிலும் விளம்பரப்படுத்த உத்தரவிடவும் அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுற்றுலா அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. இந்த வீடுகளில் தங்குமிட வசதிகளை அதிகரிக்கும் வகையில் ஊக்கப்படுத்தவும் அக்கடிதத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மத்திய சுற்றுலா வளர்ச்சித் துறை கணக்கெடுப்பின்படி, நாடு முழுவதிலும் 22 லட்சம் ஹோட்டல் அறைகள் உள்ளன. இவை பெரும்பாலும் மக்கள் நெரிசல் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு நிறைந்த பகுதிகளில் அமைந்துள்ளன.

ஆசிய நாடுகளுக்கு சுற்றுலா வருவோர் எண்ணிக்கையில் இந்தியாவுக்கு வருவோர் எண்ணிக்கை 0.68 சதவீதமாக உள்ளது. ஆனால் இந்தியாவை விட மிகக் குறைந்த நிலப்பரப்பு கொண்ட சிங்கப்பூரில் இது 0.9 சதவீதம் ஆக உள்ளது. சீனாவில் இது 6 சதவீதம் ஆகும். இந்த நாடுகளில் வீடுகளில் கட்டண விருந்தினர் முறை வெற்றிகரமாக செயல்படுவதே சுற்றுலாப் பயணிகள் ஈர்க்கப்படுவதற்கு காரணம் என முதல்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

1 min ago

ஜோதிடம்

33 mins ago

ஜோதிடம்

38 mins ago

இந்தியா

2 hours ago

க்ரைம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

சினிமா

8 hours ago

கல்வி

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்