சொத்து விவரங்களை 15-க்குள் தாக்கல் செய்ய வேண்டும்: மத்திய அரசு ஊழியர்களுக்கு உத்தரவு

By பிடிஐ

அனைத்து துறை சார்ந்த மத்திய அமைச்சகங்களின் செயலாளர்களுக்கும் மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித்துறை சமீபத்தில் ஒரு கடிதம் எழுதி உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

கடந்த 2014 மற்றும் 2015-ம் ஆண்டுகளில், தனது பெயரிலும், மனைவி மற்றும் குழந்தைகள் பெயரிலும் உள்ள சொத்துகள் மற்றும் பொறுப்புகள் பற்றிய விவரங்களை அனைத்து ஊழியர்களும் வரும் 15-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.

இதுபோல இந்த ஆண்டுக்கான சொத்து விவரங்களை வரும் ஜூலை 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். வெளிநாட்டு வங்கிகளில் உள்ள டெபாசிட் பற்றிய விவரங்களை தனியாக தாக்கல் செய்ய வேண்டும். இதை சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அமைச் சகங்கள் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் சுமார் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் லோக்பால் சட்டத்தின்படி, கையிருப்பில் உள்ள ரொக்கம், வங்கி டெபாசிட்கள், பத்திரங்கள், கடன் பத்திரங்கள், பங்குகள், மியூச்சுவல் பண்ட்கள் ஆகியவற்றில் உள்ள முதலீடுகள், காப்பீட்டு பாலிசிகள், பி.எப். நிதி, தனி நபர் கடன், பிறருக்கு கடன் கொடுத்திருந்தால் அதுபற்றிய விவரம் ஆகியவற்றை கட்டாயம் தெரிவிக்க வேண்டும்.

ரூ.2 லட்சத்துக்கும் மேற்பட்ட முதலீடாக இருந்தால் தனித்தனி யாகவும், அதற்குள் இருந்தால் குடும்பத்தினரின் முதலீடு பற்றிய தகவலை மொத்தமாகவும் தாக்கல் செய்ய வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

41 mins ago

சினிமா

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

5 hours ago

வலைஞர் பக்கம்

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

6 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்