ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக கெயில் நிறுவன இயக்குநர் கைது: சிபிஐ நடவடிக்கை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பொதுத் துறை நிறுவனமான கெயில் நிறுவனத்தின் இயக்குநரைலஞ்ச வழக்கில் சிபிஐ கைது செய்துள்ளது.

கெயில் நிறுவனத்தின் சந்தைப் பிரிவின் இயக்குநரான இ.எஸ்.ரங்கநாதன், கெயில் நிறுவனத்தால் சந்தைப்படுத்தப்படும் பெட்ரோலிய தயாரிப்புகளை தனியார் நிறுவனம் ஒன்றுக்கு சலுகை விலையில் விற்பதற்கு அந்நிறுவனத் திடமிருந்து லஞ்சம் பெற்றதாக சிபிஐ கடந்த வெள்ளிக்கிழமை அன்று வழக்குப் பதிவு செய்தது. ரூ.50 லட்சம் மேல் அவர் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பாக சனிக்கிழமை அன்றுஅவரை சிபிஐ கைது செய்தது. நொய்டாவில் அவருக்குச் செந்தமான வீட்டிலும் சிபிஐ சனிக்கிழமை அன்று சோதனை மேற்கொண்டது. அந்த சோதனையின்போது ரூ.1.29கோடி ரொக்கமும், ரூ.1.25 கோடிமதிப்புள்ள தங்க நகைகளும், மேலும் சில விலை மதிப்புள்ளபொருட்களும் கைப்பற்றப் பட்டுள்ளன.

பவுன் கவுர் மற்றும் ராஜேஷ்குமார் ஆகிய இருவர் ரங்கநாதனுக்கு இடைத்தரகர் களாக செயல்பட்டுள்ளனர். இவர்கள் ரங்கநாதன் சார்பாக ரூ.10 லட்சம் பெற்றதை பொறிவைத்து சிபிஐ பிடித்துள்ளது. இவர்கள் இருவர் தவிர, ராமகிருஷ்ணன் நாயர், சவுரவ் குப்தா, ஆதித்ய பன்சால் ஆகிய மூவரையும் இவ்வழக்கு தொடர்பாக சிபிஐ கைது செய்துள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக இதுவரையில் கைது செய்யப் பட்டுள்ள ஆறு பேரையும் சிபிஐ, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவ லில் எடுத்து விசாரிக்கும் என்று தெரிக்கப்பட்டுள்ளது.

- பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

4 hours ago

சினிமா

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

8 hours ago

வலைஞர் பக்கம்

8 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

9 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்