உ.பி. பேரவை தேர்தலை நடத்த கட்சிகள் விரும்புகின்றன: தலைமை தேர்தல் ஆணையர் தகவல்

By செய்திப்பிரிவு

உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தராகண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் அடுத்தஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுக்க 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலை தள்ளி வைக்கலாம் என்று ஒரு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த சூழலில் தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா டெல்லியில் நேற்று கூறியதாவது:

உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலை குறித்த காலத்தில் நடத்த அனைத்து கட்சிகளும் விரும்புகின்றன. கரோனா தடுப்புநடவடிக்கைகளைப் பின்பற்றி தேர்தலை நடத்தலாம் என்று கட்சிகளின் பிரதிநிதிகள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

உத்தர பிரதேசத்தில் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கரோனா வைரஸ் அச்சுறுத்தலும் அதிகரித்து வருகிறது. இதை கருத்தில் கொண்டுகூடுதலாக 11,000 வாக்குச்சாவடிகளை அமைக்க முடிவு செய்துள்ளோம். கூட்ட நெரிசலை தவிர்க்க வாக்குப்பதிவுக்கு கூடுதலாகஒரு மணி நேரம் ஒதுக்கப்படும்.

இரு தவணை தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். வாக்குச்சாவடிகளில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியோர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோரின் வீடுகளுக்கே சென்று அவர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும். வரும் 5-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். புதிதாக 28.86 லட்சம் பெண் வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். புதிய வாக்காளர்களில் ஆண்களை விட பெண்கள் 5 லட்சம் பேர் அதிகமாக உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.-பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

சினிமா

15 mins ago

இந்தியா

27 mins ago

இந்தியா

37 mins ago

இந்தியா

54 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

மேலும்