நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: நவ.28-ல் அனைத்து கட்சி கூட்டம் பிரதமர் மோடி பங்கேற்கிறார்

By செய்திப்பிரிவு

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர்பாக விவாதிக்க வரும் 28-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளார்.

நாடாளுமன்றத்தின் மழைக் காலக் கூட்டத்தொடர், ஜூலை 19 முதல் ஆகஸ்ட் 11-ம் தேதிவரை நடைபெற்றது. இந்த மழைக்காலக் கூட்டத்தொடரில் பெகாசஸ் விவகாரம், விவசாயிகளின் போராட்டம் உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் முடக்கின. இதைத் தொடர்ந்து 2 நாட்களுக்கு முன்னதாகவே கூட்டத் தொடர் முடிவடைந்தது.

இந்நிலையில், நாடாளுமன்றத் தின் குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 29-ம் தேதி தொடங்கும் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கடந்த 20-ம் தேதி அதிகாரபூர்வமாக அறிவித்தார். மேலும் அவர், அவை சுமுகமாக நடக்கும் என எதிர்பார்ப்பதாகவும், அனைத்து விஷயங்கள் குறித்தும் விவாதங்கள் நடைபெறவுள்ள தாகவும் தெரிவித்தார்.

இதனிடையே, நாடாளுமன்றத் தின் குளிர்கால கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து விவாதிக்க வரும் 28-ம் தேதி மத்திய அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. இதில் பிரதமர் மோடியும் கலந்துகொள்ள உள்ளார். குளிர்காலக் கூட்டத் தொடர் டிசம்பர் 23-ம் தேதி வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. - பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

18 mins ago

இந்தியா

4 mins ago

இந்தியா

3 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

5 hours ago

க்ரைம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

5 hours ago

வணிகம்

7 hours ago

மேலும்