போலி கணக்குகளை உருவாக்கி வருங்கால வைப்பு நிதியில் ரூ.2.7 கோடி மோசடி: அதிகாரிகள் மூவர் மீது வழக்கு பதிவு செய்தது சிபிஐ

By செய்திப்பிரிவு

போலி கணக்குகளை உருவாக்கி ரூ.2.7 கோடி வரையில் மோசடி செய்ததாக வருங்கால வைப்பு நிதி அலுவலக அதிகாரிகள் மூவர் மீது மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) ஊழல் மற்றும் மோசடி வழக்குப் பதிவு செய்துள்ளது.

சென்ற ஆண்டு ஊரடங்கு காரணமாக மக்கள் வேலையிழப்பைச் சந்தித்த நிலையில், வருங்கால வைப்பு நிதியை எடுப்பதற்கான விதிமுறைகளை வருங்கால வைப்பு நிதி அலுவலகம் தளர்த்தியது. இந்தத் தளர்வைப் பயன்படுத்தி, மும்பை கண்டிவலி மண்டல அலுவலகத்தின் மூத்த சமூக பாதுகாப்பு உதவியாளர் சந்தன் குமார் சின்ஹா, கோவையில் உள்ளவருங்கால வைப்பு நிதி மண்டல உதவி ஆணையர் உத்தம் தாக்கரே, சென்னையில் உள்ள வருங்கால வைப்பு நிதி மண்டல உதவி ஆணையர் விஜய் ஜார்பே ஆகிய மூன்று அதிகாரிகள் இணைந்து சுமார் ரூ.2.71 கோடி வரையில் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. 2 தினங்களுக்கு முன்பு இம்மூவர் மீதும்சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது

ஊரடங்கில் வேலையிழந்த புலம்பெயர் தொழிலாளர்களின் வங்கி மற்றும் ஆதார் விவரங்களைப் பெற்று, ஊரடங்கில் மூடப்பட்ட நிறுவனங்களின் ஊழியர்களாக அவர்களைச் சித்தரித்து, அதன் மூலம் வருங்கால வைப்புத்தொகை கோரிக்கையை அனுப்பிஇம்மூவர் மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. கடந்த மார்ச் முதல் இவ்வாண்டு ஜூன் வரையிலான காலகட்டத்தில் ரூ.2.71 கோடி மோசடி செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மோசடி தொடர்பான தகவல், வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தின் லஞ்ச ஒழிப்புத் துறைக்குமே 18-ம் தேதி தெரியவந்தது. அதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கோடிக்கணக்கில் மோசடி நிகழ்ந்திருப்பது உறுதியானது. கடந்த மாதம் 24ம் தேதி இது தொடர்பாக வருங்கால வைப்பு நிதி அலுவலகம் சிபிஐ-யிடம் புகார்அளித்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

28 mins ago

க்ரைம்

32 mins ago

இந்தியா

30 mins ago

சினிமா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

சுற்றுலா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

ஓடிடி களம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

மேலும்