மத்திய அமைச்சர் ரவி சங்கரின் ட்விட்டர் கணக்கு திடீர் முடக்கம்

By செய்திப்பிரிவு

மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்தின் ட்விட்டர் கணக்கை அந்நிறுவனம் நேற்று ஒரு மணி நேரம் முடக்கியதாக குற்றம் சாட்டியுள்ளார்.

அமெரிக்காவின் டிஜிட்டல் மில்லினியம் காப்புரிமை சட்ட மீறல் நடவடிக்கைகளை படிக்கும் போது அது ஒரு மணி நேரம் முடக்கப்பட்டதாகவும் பின்னர் தனக்கு தகவல் அனுப்பும் வசதி வழங்கப்பட்டதாகவும் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை மிகவும் விசித்திரமாக உள்ளது என்றும் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் ஐ.டி. விதிமுறைகளை ட்விட்டர் நிறு வனம் பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு திட்டவட்டமாகக் கூறிவிட்டது. ஆனால், தனி நபர் கருத்து சுதந்திரம் புதிய விதிகளால் பாதிக்கப்படும் என ட்விட்டர் கூறுகிறது. ஆனால் உண்மையில் அதுவல்ல, அந்நிறுவனம் சொந்த நலனுக்காக விதிகளை பின்பற்ற மறுக்கிறது என்று பிரசாத் சுட்டிக் காட்டினார்.

நிறுவனம் வகுத்த விதிமுறை கள்படிதான் பயன்படுத்துவோர் செயல்பட வேண்டும் என அந்நிறுவனம் நினைக்கிறது. எவராவது சட்டத்தை நாடினால் அவர்களது கணக்கை நீக்குகிறது.

பிற சமூக தளங்கள் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளுக் கேற்ப செயல்படும்பட்சத்தில், ட்விட்டர் மட்டும் அதை பின் பற்ற மறுக்கிறது. ஆனால் விதி முறைகளை மாற்றியமைக்க முடியாது என்று அவர் உறுதியாக கூறினார்.

கைது செய்ய தடை

சர்ச்சைக்குரிய வீடியோவை நீக்க மறுத்த விவகாரத்தில் இந்தியாவுக்கான ட்விட்டர் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநரை கைது செய்ய கர்நாடக உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூரின் ட்விட்டர் கணக்கும் நேற்று முடக்கப்பட்டது. - பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

13 mins ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

தமிழகம்

7 mins ago

சினிமா

18 mins ago

சினிமா

21 mins ago

வலைஞர் பக்கம்

25 mins ago

சினிமா

30 mins ago

சினிமா

35 mins ago

இந்தியா

43 mins ago

க்ரைம்

40 mins ago

இந்தியா

46 mins ago

தமிழகம்

1 hour ago

மேலும்