பாரிஸில் நடைபெறும் பிரமாண்ட டிஜிட்டல் நிகழ்ச்சி: பிரதமர் மோடி  உரை

By செய்திப்பிரிவு

பாரிஸில் நடைபெறும் பிரமாண்ட டிஜிட்டல் நிகழ்ச்சியான விவாடெக்கின் 5-ஆம் பதிப்பில் ஜூன் 16-ஆம் தேதி பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

விவாடெக் என்பது 2016-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் பாரிஸ் நகரத்தில் நடைபெறும் ஐரோப்பாவின் பிரமாண்ட டிஜிட்டல் மற்றும் புதுமை நிறுவனங்களின் நிகழ்ச்சியாகும். பப்லிசிஸ் குரூப் என்ற முன்னணி விளம்பரதார மற்றும் சந்தை குழுமமும், லேஸ் எக்கோஸ் என்ற பிரான்ஸ் ஊடக குழுமமும் இணைந்து இந்த நிகழ்விற்கு ஏற்பாடு செய்துள்ளன.

தொழில்நுட்ப புதுமை மற்றும் புதிய நிறுவன சூழலியலின் பங்குதாரர்களை ஒன்றிணைக்கும் இந்த நிகழ்ச்சியில் கண்காட்சிகள், விருதுகள், குழு விவாதங்கள் மற்றும் புதுமை நிறுவனங்களுக்கான போட்டிகளும் நடைபெறவிருக்கின்றன. விவாடெக் ஐந்தாவது பதிப்பு, 2021, ஜூன் 16 முதல் 19-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

விவாடெக் 2021 நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முக்கிய உரை நிகழ்த்துவதற்கு பிரதமருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விவாடெக்கின் 5-ஆம் பதிப்பு நிகழ்ச்சியில், 2021 ஜூன் 16, மாலை 4 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி முக்கிய உரை நிகழ்த்துகிறார்.

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், ஸ்பெயின் பிரதமர் திரு பெட்ரோ சான்சே, பல்வேறு ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள்.

ஆப்பிள் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக அதிகாரியுமான டிம் குக், ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக அதிகாரியுமான மார்க் ஜுகர்பெர்க், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் அதிபர் பிராட் ஸ்மித் போன்ற பெரு நிறுவனங்களின் தலைவர்களும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

23 mins ago

சினிமா

43 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

4 hours ago

வலைஞர் பக்கம்

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

6 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்