ஒரே நாளில் 20.66 லட்சம் கரோனா பரிசோதனை; இந்தியா புதிய சாதனை

By செய்திப்பிரிவு

கோவிட் பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் மற்றொரு புதிய சாதனையாக, ஒரே நாளில் மிக அதிகமாக கடந்த 24 மணி நேரத்தில் 20.66 லட்சத்திற்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் தொடர்ந்து நான்காவது நாளாக 20 லட்சத்திற்கும் அதிகமான பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

அன்றாட தொற்று உறுதி வீதம் 12.45%ஆக சரிந்துள்ளது. மொத்தம் 20,66,285 பரிசோதனைகள் கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் மேற்கொள்ளப்பட்டன.

தொடர்ந்து 9-வது நாளாக அன்றாட புதிய பாதிப்புகளை விட தினசரி குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3,57,630 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

இதன் மூலம் நம் நாட்டில் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,30,70,365 ஆக இன்று பதிவாகியுள்ளது. தொற்றிலிருந்து குணமடைபவர்களின் தேசிய வீதம் 87.76% ஐ எட்டியுள்ளது.

மற்றொரு நேர்மறை வளர்ச்சியாக, 6-வது நாளாக, தினசரி புதிய பாதிப்புகள், 3 லட்சத்திற்கும் குறைவாக ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2,57,299 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர்.

கொவிட் தொற்றுக்கு இந்தியாவில் தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 29,23,400 ஆக இன்று குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையில் 1,04,525 சரிந்துள்ளது. நாட்டில் இதுவரை ஏற்பட்ட மொத்த பாதிப்பில் தற்போது சிகிச்சை பெறுவோர் 11.12% ஆகும்.

மாபெரும் தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்டுள்ள மொத்த கொவிட் தடுப்பூசியின் எண்ணிக்கை 19.33 கோடியாக பதிவாகியுள்ளது.

இன்று காலை 7 மணிக்குக் கிடைத்த முதற்கட்ட அறிக்கையின்படி இதுவரை மொத்தம் 27,76,936 முகாம்களில் 19,33,72,819 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

21 mins ago

ஜோதிடம்

26 mins ago

இந்தியா

12 mins ago

இந்தியா

11 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

5 hours ago

க்ரைம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

5 hours ago

மேலும்