கரோனா பரவலை தடுக்க 3 வழிகள்- மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அறிவுரை

By செய்திப்பிரிவு

மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் விஜய் ராகவன் ட்விட்டரில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

கரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள், இதுவரை தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களுக்கு முக்கிய ஆலோசனையை கூற விரும்பு கிறேன். வைரஸ் பரவலை தடுக்க 3 வழிகள் உள்ளன. அனைவரும் கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். காற்றோட்டமான இடத்தில் இருக்க வேண்டும்.

கரோனா வைரஸ் பரவல்அதிகமாக இருக்கும் சூழ்நிலையில் இந்த 3 ஆலோசனைகளையும் கண்டிப்புடன் பின்பற்றினால் சுகாதார துறையின் பணிச்சுமை குறையும். தனி நபர் மற்றும் சமூகரீதியாக அனைவரும் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு விஜய் ராகவன் கூறியுள்ளார்.

மத்திய சுகாதாரத் துறை அண்மையில் வெளியிட்ட அறி விப்பில், "பொது இடங்களில் மட்டுமன்றி வீடுகளில் இருக்கும் போது கூட முகக் கவசம் அணிவது அவசியமாகிறது. 2 தவணை கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களும் பாதுகாப்பு நடைமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். அப்போது தான் கரோனா வைரஸ் பரவலைதடுக்க முடியும்" என்று அறிவுறுத்தப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

40 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

சினிமா

2 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

6 hours ago

வலைஞர் பக்கம்

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்