தெலங்கானாவில் இன்று முதல் 20 மணி நேரம் ஊரடங்கு

By செய்திப்பிரிவு

தெலங்கானா அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்றது. இதில் மாநிலத்தில் கரோனா வைரஸ் பரவல் குறித்து விவாதிக்கப்பட்டது.

இதையடுத்து, மாநிலத்தில் மே 12-ம் தேதி காலை 10 மணி முதல் 10 நாட்களுக்கு ஊரடங்கை அமல்படுத்துவது எனவும் காலை 6 மணி முதல் 10 மணி வரை 4 மணி நேரம் மட்டும் ஊரடங்கை தளர்த்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது. அத்தியாவசியப் பொருட்களை மக்கள் வாங்கு வதற்காக இந்த தளர்வு வழங்கப்படுகிறது. மேலும் கரோனா தடுப்பூசிகள் கொள்முதல் செய்ய குளோபல் டெண்டர் முறையை பின்பற்ற முடிவு செய்யப்பட்டது.

இதனை அமைச்சரவை கூட்டத்துக்கு பிறகு முதல்வர் அலுவலகம் தெரிவித்தது.

தெலங்கானாவில் 20 மணி நேர ஊரடங்கு தொடர்பான அறிவிப்பு நேற்று வெளியானதும் மதுக்கடைகளில் கூட்டம் அலைமோதியது. பலரும் நீண்ட வரிசையில் நின்று மது பாட்டில்களை வாங்கிச் சென்றனர். பல இடங்களில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப் படவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

9 mins ago

சினிமா

29 mins ago

சுற்றுச்சூழல்

52 mins ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

4 hours ago

வலைஞர் பக்கம்

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

6 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்