இந்தியாவில் 3,29,942 பேருக்கு புதிதாக கரோனா தொற்று

By செய்திப்பிரிவு

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 3,29,942 பேர் புதிதாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,29,942 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 2,29,92,517 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது கரோனாவில் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 37,15,221 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை கரோனாவிலிருந்து 1,90,27,304 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணிே நேரத்தில் கரோனாவிலிருந்து 3,56,082 பேர் குணமடைந்தனர்.

கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவில் 3,876 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 2,49,992 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 17,27,10,066 பேர் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.

ஐசிஎம்ஆர் அறிவிப்பின்படி, இதுவரை 30,56,00,187 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 18,50,110 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 mins ago

க்ரைம்

1 min ago

இந்தியா

7 mins ago

தமிழகம்

29 mins ago

இந்தியா

36 mins ago

இந்தியா

48 mins ago

இந்தியா

58 mins ago

இந்தியா

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்