கரோனா பரவல் வேகம்; மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் சற்று குறைவு

By செய்திப்பிரிவு

மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பரவல் வேகம் சற்று குறைந்துள்ளது.

நாடு முழுவதும் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள பரிசோதனைகளின் எண்ணிக்கை இன்று 29.16 கோடியைக் கடந்தது. இதுநாள் வரை 29,16,47,037 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,62,93,003 ஆக (81.77%) இன்று பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3,00,732 பேர் புதிதாக குணமடைந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 3,68,147 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் பதிவான புதிய பாதிப்புகளில், தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, உத்தரப் பிரதேசம், தில்லி, மேற்கு வங்கம், ஆந்திரப்பிரதேசம், ராஜஸ்தான், பிஹார் ஆகிய பத்து மாநிலங்களில் மட்டும் 73.78 சதவீதம் பதிவாகியுள்ளது.

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 56,647 பேரும், கர்நாடகாவில் 37,733 பேரும், கேரளாவில் 31,959 பேரும் புதிதாகத் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். கடந்த 2 வாரங்களை ஒப்பிடுகையில் கரோனா பரவல் வேகம் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் சற்று குறைந்துள்ளது. 60 ஆயிரத்தை கடந்து இருந்த தினசரி தொற்று மகாராஷ்டிராவில் சற்று கட்டுக்குள் உள்ளது.

இந்தியாவில் தற்போது 34,13,642 பேர் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது மொத்த பாதிப்பில் 17.13 சதவீதமாகும்.

கடந்த 24 மணி நேரத்தில் 3,417 பேர் உயிரிழந்துள்ளனர். தேசிய உயிரிழப்பு விகிதம் 1.10 சதவீதமாகக் குறைந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

18 mins ago

விளையாட்டு

1 hour ago

சினிமா

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

6 hours ago

வலைஞர் பக்கம்

6 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

7 hours ago

மேலும்