மத்திய அரசு, நிபுணர்களின் ஆலோசனைப்படி மகாராஷ்டிராவில் கடும் கட்டுப்பாடு: தேசியவாத காங். தலைவர் சரத் பவார் தகவல்

By செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு மற்றும் நிபுணர்களின் ஆலோசனைப்படி மகாராஷ்டிராவில் கடும் கட்டுப் பாடுகள் விதிக்கப்பட்டுள்ள தாகவும் மக்கள் ஒத்துழைக்க வேண்டும் எனவும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறியுள்ளார்.

சரத்பவார் நேற்று முகநூலில் நேரலையில் பேசியதாவது:

மகாராஷ்டிரா இதுபோன்ற ஒரு ஆபத்தான சூழலை முன்னெப்போதும் சந்தித்த தில்லை. கரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. சுகாதார உள்கட்டமைப்பு மிதமிஞ் சிய சுமையில் உள்ளது. வேறு எந்த வழியும் இல்லாததால் சுகாதார நிபுணர்களின் ஆலோ சனையை பின்பற்றி கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க மாநில அரசு முடிவு செய்தது. மத்திய அரசும் சில கடுமையான முடிவுகளை எடுக்கும்படி மாநில அரசிடம் வலியுறுத்தியது. இங்குள்ள நிலைமை குறித்து மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தனுடன் பேசினேன். தடுப்பூசி பற்றாக்குறை குறித்து விவாதித்தோம்.மத்திய சுகாதாரத் துறை மகாராஷ்டிராவுக்கு உறு துணையாக இருக்கும் என அவர் உறுதி அளித்தார். மாநில அரசு நடவடிக்கைகளுக்கு மக்க ளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என்றார்.

மகாராஷ்டிராவில் கரோனா தடுப்பூசி பற்றாக்குறை உள்ளதாக வும் பல தடுப்பூசி விநியோக மையங்களை மூடிவிட்டதாகவும் மாநில சுகாதார அமைச்சர் ராஜேஷ் தோபே நேற்று முன்தினம் கூறினார். இதற்கு மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன், “கரோனா வைரஸை எதிர்த்துப் போரிடுவதில் தவறான மற்றும் மிகச் சாதாரண அணுகுமுறையை மகாராஷ்டிர அரசு கையாளுகிறது. இந்த விவகாரத்தை அரசியலாக்கு கிறது” என குற்றம் சாட்டினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

கருத்துப் பேழை

23 mins ago

தமிழகம்

21 mins ago

இந்தியா

40 mins ago

இந்தியா

47 mins ago

இந்தியா

53 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

53 mins ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

மேலும்