ஹர்திக் படேலுக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரும் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

By பிடிஐ

படேல் இட ஒதுக்கீடு போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் ஹர்திக் படேல் மற்றும் 5 பேருக்கு எதிரான தேச துரோக வழக்கை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை முடிந்ததையடுத்து, குஜராத் உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பை ஒத்திவைத்தது.

நீதிபதி ஜே.பி.பர்திவாலா முன்னிலையில் இந்த மனு மீது நேற்று விசாரணை நடை பெற்றது. அப்போது, அரசு தரப் பில் ஆஜரான மிதேஷ் அமின், ஹர்திக் படேல் உள்ளிட்ட 6 பேர் மீது குற்றப் பிரிவு போலீஸார் தேசத்துரோக வழக்கு பதிவு செய் ததை ஆதரித்து வாதாடினார்.

“கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரை குற்றம் சாட்டப்பட்டவர்களின் தொலை பேசி உரையாடலை போலீஸார் இடைமறித்து கேட்டுள்ளனர். அப்போது, அவர்கள் காவல் நிலையங்களை தாக்குமாறும், ரயில் பாதைகளை சேதப்படுத்து மாறும், போலீஸாரை கொல்லு மாறும் ஆதரவாளர்களுக்கு கட்ளையிட்டுள்ளனர். இது அரசுக்கு எதிரான சதி ஆகும்” என வாதாடினார்.

ஹர்திக் தரப்பில் வழக்கறிஞர் பி.எம்.மங்குகியா ஆஜராகி வாதாடினார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தீர்ப்பை ஒத்திவைத்தார்.

படேல் இனத்தவர்களுக்கான இட ஒதுக்கீடு போராட்டக் குழு (பாஸ்) ஒருங்கிணைப்பாளரான ஹர்திக் படேல் மற்றும் 5 பேர் மீது போலீஸார் கடந்த 21-ம் தேதி தேச துரோகம் மற்றும் நாட்டுக்கு எதிராக போரிடுதல் உள்ளிட்ட ஐபிசி-யின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதை ரத்து செய்யக் கோரி 6 பேரும் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

தமிழகம்

38 mins ago

தமிழகம்

47 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்