குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டத்தில் விவசாயி வங்கி கணக்குக்கு நேரடியாக பணம்

By செய்திப்பிரிவு

பஞ்சாப் மாநிலத்தில் குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து கோதுமை உள்ளிட்ட தானியங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன. அந்த மாநிலத்தில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி இடைத்தரகர்கள் மூலமே தானியங்கள் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன.

தானியங்களுக்கான தொகையை இடைத்தரகர்கள் வங்கி மூலம் பெற்று, அவர்களே விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்புகின்றனர். இதில்் இடைத்தரகர்கள் 2.5 சதவீத கமிஷன் பெறுகின்றனர்.

இந்த பின்னணியில், பஞ்சாப் மாநில குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டத்தில் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக பணம் செலுத்தப்படும் என்று இந்திய உணவு கழகம் (எப்சிஐ) அறிவித்துள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த விவசாயிகளின் நில ஆவணங்கள், வங்கிக் கணக்கு விவரங்களை அளிக்குமாறு மத்திய உணவு, பொதுவிநியோகம், நுகர்வோர் துறைக்கு இந்திய உணவு கழகத்தின் பஞ்சாப் கிளை கடிதம் அனுப்பியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

47 mins ago

ஜோதிடம்

51 mins ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

க்ரைம்

7 hours ago

உலகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

வேலை வாய்ப்பு

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

கல்வி

10 hours ago

மேலும்