மாற்றுத் திறனாளிகளுக்கு 2வது மாடியில் நேர்முகத் தேர்வு: ரயில்வே துறையின் அலட்சியத்தால் வெடித்தது சர்ச்சை

By செய்திப்பிரிவு

ரயில்வே துறையில் மாற்றுத் திறனாளிகளுக்கு பணி வழங்கு வதற்காக நடத்தப்பட்ட நேர்முகத் தேர்வில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ரயில்வே துறையில் மாற்று திறனாளிகளுக்கும் பணி வழங்க வேண்டும் என சமீபத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, 450 பேருக்கு பணி வழங்க ரயில்வே துறை முடிவு செய்து, அதற்கான வேலை வாய்ப்பு நேர்முகத் தேர்வை நடத்தும்படி தனியார் நிறுவனத் திடம் ஒப்படைத்திருந்தது.

டில்லியில் நடந்த இந்த நேர் முகத் தேர்வில் பங்கேற்க ஏராள மானோர் ஆர்வமுடன் திரண்டனர். ஆனால் அங்கு வந்த பின்னர் தான், நேர்முகத் தேர்வு 2வது மாடியில் நடக்கிறது என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். தவிர, அங்கு செல்வதற்கும் லிபிட் வசதிகள் இல்லாதது அவர்களுக்கு கடும் ஏமாற்றத்தை அளித்தது. எனினும் சிலர் விடாப்பிடியாக 2வது மாடிக்கு செல்ல முயன்று கடும் சிரமத்துக்கு ஆளாகினர். இதனால் குறித்த நேரத்துக்கு அவர் களால் நேர்முகத் தேர்வுக்கு செல்ல முடியவில்லை. மாற்றுத்திறனாளி களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தராமல், 2வது மாடியில் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, தவறு இழைத் தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு உத்தரவிட்டதாக தெரி கிறது. இது குறித்து தன் ‘ட்விட்டர்’ பக்கத்தில் கருத்து தெரிவித்த அவர், ‘‘தவறுக்கு யார் காரணம் என்பதை அறிய உத்தரவிடப்பட் டுள்ளது’’ என குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவத்தை அடுத்து, மாற்றுத்திறனாளிகள் பங்கேற்க முடியாத 12 மையங்களில் நடக்கும் நேர்முகத் தேர்வுகளை ரயில்வே துறை நேற்று அதிரடியாக ரத்து செய்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், 2-வது மாடியில் நேர்முகத் தேர்வு நடத்திய தனியார் நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டிருப்பதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரி வித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

13 mins ago

க்ரைம்

17 mins ago

சுற்றுச்சூழல்

53 mins ago

க்ரைம்

57 mins ago

இந்தியா

55 mins ago

சினிமா

2 hours ago

கருத்துப் பேழை

1 hour ago

சுற்றுலா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்