டெல்லி அருகே விபத்தில் விவசாயி உயிரிழந்த சம்பவம்: உடல் மீது தேசியக் கொடியைப் போர்த்தியதாக எஃப்ஐஆர் பதிவு

By பிடிஐ

விபத்தில் உயிரிழந்த விவசாயி மீது தேசியக் கொடியைப் போர்த்தியதாக அவரது குடும்பத்தினர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உ.பி.போலீஸார் தெரிவித்தனர்.

மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்றும், பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் கோரி நவம்பர் முதல் ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி எல்லையில் முகாமிட்டுள்ளனர். எனினும் இச்சட்டங்கள் விவசாயிகளுக்கு ஆதரவானவை என மத்திய அரசு கூறிவருகிறது.

கடந்த மாதம் 23-ம் தேதி டெல்லி காசிப்பூர் எல்லையில் விவசாயிகள் போராட்டத்திற்கு வந்த உ.பி.யைச் சேர்ந்த விவசாயி ஒருவர், 25-ம் தேதி அன்று போராட்டக் களத்திற்கு அருகே விபத்தில் உயிரிழந்தார். அவரது உடலை ஊருக்குக் கொண்டு சென்ற அவரது குடும்பத்தினர் இறுதிச்சடங்கின்போது தேசியக் கொடியைப் போர்த்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் ஜெய்பிரகாஷ் யாதவ் கூறியதாவது:

''செஹ்ராமாவ் பகுதியில் உள்ள பாரி புஜியா கிராமத்தில் வசிக்கும் பால்ஜிந்திரா, ஜனவரி 23-ம் தேதி தனது நண்பர்களுடன் விவசாயிகளின் போராட்டத்தில் பங்கேற்கச் சென்றிருந்தார். ஜனவரி 25ஆம் தேதி அவர் ஒரு விபத்தில் இறந்தார். அவரது உடல் அடையாளம் தெரியாதவரின் சடலமாக சவக்கிடங்கில் வைக்கப்பட்டது.

நடந்த சம்பவம் குறித்து அறிந்த அவரது குடும்ப உறுப்பினர்கள் பிப்ரவரி 2-ம் தேதி, அவரது உடலைச் சொந்த ஊருக்குக் கொண்டு வந்தனர். தேசியக் கொடியால் உயிரிழந்தவரின் உடலை மூடி வியாழக்கிழமை இறுதிச் சடங்குகளுக்கு அவரது குடும்பத்தினர் எடுத்துச் சென்றனர். இறுதிச் சடங்குகளின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.

இது தொடர்பாக பால்ஜிந்திராவின் தாய் ஜஸ்வீர் கவுர் சகோதரர் குர்விந்தர் மற்றும் அடையாளம் தெரியாத ஒருவர் மீதும் எஃப்ஐஆர் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது''.

இவ்வாறு காவல் கண்காணிப்பாளர் ஜெய்பிரகாஷ் யாதவ் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 mins ago

விளையாட்டு

43 mins ago

க்ரைம்

47 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

சுற்றுலா

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்