அசாம் அரசு விழாவில் பிரியாணி சாப்பிட்ட 145 பேர் மருத்துவமனையில் அனுமதி

By செய்திப்பிரிவு

அசாம் மாநிலம் கர்பி ஆங்லாங் மாவட்டம் திபு மருத்துவக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடந்த அரசு விழாவில் முதல்வர் சர்வானந்த சோனோவால், சுகாதார அமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டது. பிரியாணி சாப்பிட்டவர்களில் பலருக்கு வாந்தியும் வயிற்றுவலியும் ஏற்பட்டது. செவ்வாய்க்கிழமை இரவு முதல் 145 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் அவர்களில் 28 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் 117 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் சுகாதார அமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மா தெரிவித்தார். விழாவில் பிரியாணி சாப்பிட்ட தனக்கும் வயிற்றுவலி ஏற்பட்டு இப்போது சரியாகிவிட்டதாக சர்மா கூறினார். இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கர்பி ஆங்லாங் மாவட்ட போலீஸ் துணை கமிஷனர் சந்திர த்வஜா சின்கா தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

சினிமா

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

5 hours ago

வலைஞர் பக்கம்

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

7 hours ago

ஜோதிடம்

6 hours ago

மேலும்