பாலசக்தி புரஸ்கார் திட்டத்தின் கீழ் விருது பெற்ற குழந்தைகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு

By செய்திப்பிரிவு

பாலசக்தி புரஸ்கார் விருது பெற்ற குழந்தைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்தார்.

புதிய கண்டுபிடிப்பு, விளை யாட்டு, கலை மற்றும் கலாச்சாரம், சமூக சேவை, கல்வி, வீரதீரச் செயல் உள்ளிட்ட துறைகளில் சிறப்பான சாதனை படைத்தகுழந்தைகளுக்கு ‘பிரதம மந்திரிராஷ்ட்ரீய பால புரஸ்கார்' திட்டத்தின் கீழ் ‘பாலசக்தி புரஸ்கார்’விருது ஆண்டுதோறும் வழங்கப் படுகிறது.

இந்த ஆண்டு பால புரஸ்கார் விருதுக்கு நாடு முழுவதிலும் இருந்து 32 குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டனர். விருது பெறும் குழந்தைகளுடன் பிரதமர் மோடி நேற்று டெல்லியில் இருந்து காணொலிக் காட்சி மூலம் உரையாடினார். அவர்களுக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார்.

கரோனா தொற்று காலத்தில் கைகளை கழுவுவதில் மக்களிடம் ஏற்பட்ட விழிப்புணர்வுக்கு குழந் தைகளின் பங்களிப்பையும் மோடி பாராட்டினார்.

மேலும், இடைவிடாமல் உழைக்க வேண்டும் என்றும் எப்போதும் பணிவுடன் இருக்கவேண்டும் என்றும் குழந்தைகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கினார். நாட்டுக்காக பணியாற்ற வேண்டும் என்றும் 75-வது சுதந்திர தினத்தை நாடு கொண்டாடும்போது நாட்டுக்காக என்ன செய்ய முடியும் என்று சிந்திக்குமாறும் கேட்டுக் கொண்டார்.

தலைவர்கள், சாதனையாளர் கள், நாட்டுக்கு உழைத்த தியாகிகளின் வாழ்க்கை வரலாறுகளை படிக்கும்படியும் அதன் மூலம் ஊக்கம் பெற முடியும் என்றும் குழந்தைகளுக்கு பிரதமர் அறி வுறுத்தினார். புதிய விவசாயக் கருவியை கண்டுபிடித்திருக்கும் சிறுவனை பிரதமர் மோடி பாராட்டினார். நவீன விவசாயம் நாட்டுக்கு தேவைப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வேலை வாய்ப்பு

4 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

கல்வி

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்