கரோனா; 10 லட்சம் மக்கள் தொகையில் குறைவான இறப்பு: தொடர்ந்து இந்தியாவுக்கு இடம்

By செய்திப்பிரிவு

உலகிலேயே 10 லட்சம் மக்கள் தொகையில் குறைவான இறப்புகளை காணும் நாடுகளில் ஒன்றாக இந்தியா தொடர்ந்து உள்ளது.

கோவிட்-19 காரணமாக ஏற்படும் உயிரிழப்புகளில், உலகிலேயே 10 லட்சம் மக்கள் தொகையில் குறைவான இறப்புகளை காணும் நாடுகளில் ஒன்றாக இந்தியா தொடர்ந்து உள்ளது. இன்று இந்த எண்ணிக்கை 81 ஆக உள்ளது.

அக்டோபர் 2 முதல் கடந்த 14 நாட்களாக 1,100-க்கும் குறைவான உயிரிழப்புகளே இந்தியாவில் நிகழ்ந்துள்ளன. 22 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் தேசிய சராசரியை விட குறைவான இறப்புகள் நிகழ்ந்துள்ளன.

கோவிட் மேலாண்மை மற்றும் பதில் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, தொற்று பரவலை கட்டுப்படுத்துவதில் மட்டுமில்லாமல், இறப்புகளின் எண்ணிக்கையை குறைப்பதிலும் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் 70,338 நபர்கள் குணமடைந்த நிலையில், 63,371 புதிய பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இது வரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 64,53,779 ஆகும்.

குணமடைந்தோர் மற்றும் தற்போது சிகிச்சையில் உள்ளவர்களுக்கு இடையேயான இடைவெளி 56 லட்சத்தை (56,49,251) கடந்துள்ளது. தற்போது சிகிச்சையில் உள்ளவர்களை விட குணமடைந்தோரின் விகிதம் 8 மடங்கு அதிகமாகும்.


VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

23 mins ago

இந்தியா

29 mins ago

தமிழகம்

48 mins ago

தமிழகம்

51 mins ago

சினிமா

58 mins ago

விளையாட்டு

1 hour ago

வணிகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

ஓடிடி களம்

2 hours ago

கல்வி

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்