கரோனா உயிரிழப்பு; 1.84 சதவீதமாக குறைந்தது

By செய்திப்பிரிவு

கடந்த 24 மணி நேரத்தில் இது வரை இல்லாது 66,550 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியா மற்றுமொரு உச்சத்தை அடைந்துள்ளது: மொத்தம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 24 லட்சத்தைக் கடந்துள்ளது.

மத்திய அரசு, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுடன் ஒருங்கிணைந்து கொவிட்-19 தொடர்பான உத்திகளை நடைமுறைப் படுத்தியதால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொவிட்-19 தொற்றிலிருந்து 66,550 பேர் குணமடைந்துள்ளனர். தீவிர பரிசோதனை, தரமான சிகிச்சை ஆகிய அரசின் உத்திகளைப் பயன்படுத்தியதால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 24 லட்சத்தைக் கடந்துள்ளது (24,04,585).

கோவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 76 சதத்தை நெருங்குகிறது (75.92%). குணமடைந்தவர்களின் எண்ணிக்கை, மருத்துவக் கண்காணிப்பில் இருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கையைவிட 17 லட்சத்துக்கும் அதிகமாகும். இன்றைய நிலவரப்படி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை, தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களை விட 3.41 மடங்கு அதிகமாகும்.

கடந்த 25 நாட்களில் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 100 சதவீதத்திற்கு மேல் அதிகரித்துள்ளது.

அதிக அளவில் குணமடைந்து வருபவர்களின் எண்ணிக்கை விகிதம், நாட்டின் உண்மை நிலவரத்தை உறுதி செய்திருப்பதுடன், தற்சமயம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. கோவிட் நோய்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள ஒட்டுமொத்த நோயாளிகளில் தற்போது இந்த எண்ணிக்கை 22.47 சதவிகிதமாக குறைந்துள்ளது.

மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் ஒருங்கிணைந்து மத்திய அரசு மேற்கொண்ட, நோய் தொற்றை விரைவில் கண்டறிதல், தீவிர பரிசோதனை, தரமான மருத்துவ சிகிச்சை போன்ற நடவடிக்கைகள், உயிரிழப்பு வீதத்தைக் 1.84 சதவீதமாக குறைத்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

50 mins ago

சினிமா

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

5 hours ago

வலைஞர் பக்கம்

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

7 hours ago

ஜோதிடம்

6 hours ago

மேலும்