5 மாதங்களில் 1 கோடியே 78 லட்சத்துக்கும் அதிகமான  ரயில் டிக்கெட்டுகள் கேன்சல்: ஆர்டிஐ மூலம் பெறப்பட்ட தகவல்

By பிடிஐ

இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் 1 கோடியே 78 லட்சம் ரயில் டிக்கெட்டுகளுக்கும் அதிகமாகக் கேன்சல் செய்யப்பட்டுள்ளதாகவும் ரூ.2,727 கோடி ரூபாய் பயணிகளுக்கு திருப்பி அளிக்கப்பட்டதாகவும் ஆர்டிஐ கோரிக்கையில் கிடைத்த தகவல் தெரிவிக்கிறது.

மார்ச் 25 முதல் ரத்து செய்த பயணிகள் ரயிகள் காரணமாக ரயில்வே 1 கோடியே 78 லட்சத்து 70 ஆயிரத்து 644 டிக்கெட்டுகளைக் கேன்சல் செய்துள்ளது.

முன்னதாக முதல் முறையாக ரயில்வே நிர்வாகம் டிக்கெட் புக்கிங்குகளால் வந்த தொகையை விட அதிக தொகையை ரீஃபண்ட் செய்துள்ளது என்று பிடிஐ நிறுவனம் ஏற்கெனவே செய்தி வெளியிட்டிருந்தது.

கடந்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் ஆகஸ்ட் 11ம் தேதி வரை ரயில்வே ரூ.3,660.68 கோடி ரூபாயை பயணிகளிடத்தில் திருப்பி அளித்தது. இதே காலக்கட்டத்தில் ரயில்வே ரூ.17,309.1 கோடி வருவாய் ஈட்டியது.

ஆனால் இப்போதுதான் முதல் முறையாக ரயில்வேயுக்கு டிக்கெட் விற்பனை மூலம் வந்த தொகையை விட ரீஃபண்ட் மூலம் அதிக தொகை பயணிகளுக்கு திரும்பிச் சென்றுள்ளது.

ஏப்ரல் மாதத்தில் ரயில்வேயின் வருவாய் ரூ.531.12 கோடி, மே-யில் 145.24 கோடி, ஜூனில் ரூ.390.6 கோடி (அனைத்துமே நெகட்டிவ்)

கடந்த நிதியாண்டில் ஏப்ரல் மாதத்தில் ரூ.4,345 கோடி வருவாய் ஈட்டிய ரயில்வே, மே மாதத்தில் ரூ.4,463 கோடியும் ஜூனில் ரூ.4,589 கோடியும் வருவாய் ஈட்டியது குறிப்பிடத்தக்கது.

இப்போதைக்கு அனைத்து பயணிகள் ரயில் சேவைகளை காலவரையின்றி நிறுத்தியுள்ளது ரயில்வே.

இந்த ஆர்டிஐ கோரிக்கையை மேற்கொண்டவர் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சந்திர சேகர் என்பவராவார். கேன்சல் செய்த டிக்கெட்டுகளுக்கு ரயில்வே நிர்வாகம் கட்டணம் கழித்துக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

தமிழகம்

35 mins ago

தமிழகம்

44 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்