100 நாட்களுக்கு பிறகு நிம்மதி: மும்பையில் குறைந்தது கரோனா தொற்று

By செய்திப்பிரிவு

மும்பையில் 100 நாட்களுக்கு பிறகு கரோனா வைரஸ் தொற்று முதன் முதலாக ஒரு நாளில் 700 என்ற அளவில் குறைந்துள்ளது.

கரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. எனினும் நாடுமுழுவதும் கரோனா பரவல் அதிகரித்த வண்ணம் உள்ளது.

சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்களின் படி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 14 லட்சத்து 81 ஆயிரத்து 157. இதில் சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 4,96,988, குணமடைந்தொர் எண்ணிக்கை 9, 52,744. பலி எண்ணிக்கை இதுவரை 33,425.

கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 47,704, பலியானோர் எண்ணிக்கை 654. தொடர்ச்சியாக 6வது நாளாக ஒரேநாளில் 45,000த்திற்கும் மேற்பட்டோர் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிரா பாதிப்பு எண்ணிக்கையில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. மொத்தம் 1,48,905 பேர் இங்கு சிகிச்சையில் உள்லனர், பலி எண்ணிக்கை 13,656 ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் மும்பை நகர் மிக மோசமாக பாதிக்கப்பட்டு வந்தது.

இந்தநிலையில் மும்பையில் 100 நாட்களுக்கு பிறகு கரோனா வைரஸ் தொற்று முதன் முதலாக ஒரு நாளில் 700 என்ற அளவில் குறைந்துள்ளது. மும்பையை பொறுத்தவரை கடந்த 100 நாட்களாகவே தினந்தோறும் நூற்றுக்கணக்கானோருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு வந்தது. இந்தநிலையில் தற்போது அங்கு கரோனா பரவல் குறைந்து வருகிறது. 24 மணிநேரத்தில் நடந்த சோதனையில் 700 பேருக்கு மட்டுமே கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

10 mins ago

க்ரைம்

14 mins ago

சுற்றுச்சூழல்

50 mins ago

க்ரைம்

54 mins ago

இந்தியா

52 mins ago

சினிமா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

சுற்றுலா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்