நிரவ் மோடியின் ரூ.1,350 கோடி மதிப்புள்ள நகைகள்: ஹாங்காங்கில் இருந்து மீட்டது அமலாக்கத்துறை

By செய்திப்பிரிவு

வங்கி மோசடியில் ஈடுபட்டு வெளிநாடு தப்பிய, நிரவ் மோடி, மெகுல் சோக்சிக்கு சொந்தமான, ரூ.1,350 கோடி மதிப்புள்ள, 2,300 கிலோ தங்க, வைர நகைகளை அமலாக்கத்துறையினர் மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வந்துள்ளனர்.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் வைர வியாபாரி நிரவ் மோடி ரூ. 13,578 கோடி கடன் பெற்று மோசடி செய்ததாக சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. அதுபோலவே, மெகுல் சோக்சி மீதும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை ரூ. 5 ஆயிரம் கோடிக்கும் அதிகமான நிரவ் மோடியின் சொத்துக்களை சிபிஐ முடக்கி உள்ளது.

நிரவ் மோடியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு ரொக்கப்பணம், டெபாசிட்கள், சொகுசு கார், இறக்குமதி செய்யப்பட்ட கைக்கடிகாரங்கள், வீடுகள், நிலம் என பலதரப்பட்ட சொத்துக்கள் முடக்கப்பட்டன. மேலும், அவரது நிறுவனத்தின் சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

நிரவ் மோடி லாவேசில் நடைபெற்ற உலக வர்த்தக மாநாட்டிற்கு, சென்றவர் பின்னர் நாடு திரும்பிவில்லை. லண்டனில் தலைமறைவாக இருந்த நீரவ் மோடியை கடந்த மார்ச் மாதம் லண்டன் போலீசார் கைது செய்தனர். அவரை இந்தியாவுக்கு கொண்டு வரும் முயற்சிகள் நடந்து வருகின்றன.

மோசடியில் தொடர்புடைய அவரது உறவினர் மெகுல் சோக்ஸி ஆண்டிகுவா நாட்டில் தஞ்சம் அடைந்திருக்கிறார். அவரையும் இந்தியா கொண்டு வரும் முயற்சிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், நிரவ் மோடி, மெகுல் சோக்சிக்கு சொந்தமான 2,300 கிலோ எடைகொண்ட தங்கம், வைர நகைகளை அமலாக்கத்துறையினர் மீட்டு, இந்தியாவுக்கு கொண்டு வந்துள்ளனர். இதன் மதிப்பு ரூ.1,350 கோடி என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. 2018ம் ஆண்டு நிரவ், மெகுல் இருவரும் ஹாங்காங்கிலிருந்து, துபாய்க்கு இந்த நகைகளை கொண்டு செல்ல திட்டமிட்டிருந்தனர். கடைசி நேரத்தில் இத்திட்டம் தோல்வியில் முடிந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

15 mins ago

தமிழகம்

23 mins ago

வாழ்வியல்

29 mins ago

தமிழகம்

53 mins ago

இந்தியா

59 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

வணிகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்