அடுத்த 3 தினங்களுக்கு வெப்ப அலை வீசும்: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

அடுத்த 3 தினங்களுக்கு இந்தியாவின் பல பகுதிகளில் வெப்ப அலை வீசும் என்பதால் மக்கள் போதிய முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

வடமேற்கு இந்தியா, மத்திய இந்தியா மற்றும் கிழக்கு இந்தியாவின் உள் பகுதிகள் ஆகியவற்றின் மீது நிலவும் வறண்ட வடமேற்கு காற்று காரணமாக, தற்போதைய வெப்ப அலை நிலைமைகள் அடுத்த 2 நாட்களுக்கு தொடர்ந்து நிலவும் வாய்ப்பு உள்ளது.

வானிலை ஆய்வு பிரிவு வாரியாக, 26 முதல் 27 ஆம் நாட்களில் விதர்பா மீது பல இடங்களில் கடுமையான வெப்ப அலை நிலைமையான அனல் காற்று வீசக்கூடும்.

மேலும் மே 26 அன்று ஹரியாணா, சண்டிகர், டெல்லி, ராஜஸ்தான், உத்தரபிரதேசம் மற்றும் கிழக்கு மத்திய பிரதேசத்தின் சில பகுதிகளில் வெப்ப அலை ஏற்பட்டுள்ளது. ஹரியாணா, சண்டிகர், டெல்லி, மேற்கு உத்தரப்பிரதேசம், கிழக்கு ராஜஸ்தான், மத்திய பிரதேசம், பஞ்சாப் மற்றும் கிழக்கு உத்தரப்பிரதேசத்தின் ஒரு சில இடங்களில் மே 27 அன்று வெப்ப அலை நிலைகள் ஏற்படக்கூடும்.

அடுத்த 2-3 நாட்களில் பிஹார், ஜார்க்கண்ட், ஒடிசா, மராத்தாவாடா மற்றும் மத்திய மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களின் ஒரு சில இடங்களில் வெப்ப அலை நிலைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 min ago

விளையாட்டு

1 hour ago

சினிமா

1 hour ago

சுற்றுச்சூழல்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

5 hours ago

வலைஞர் பக்கம்

6 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

7 hours ago

மேலும்