ஜப்பானில் ஊரடங்கு நீக்கம்: கரோனா வேகம் குறைவதால் பிரதமர் உத்தரவு

By செய்திப்பிரிவு

ஜப்பானில் கரோனா தொற்று வேகம் குறையத் தொடங்கியுள்ளதால் ஊரடங்கை திரும்பப் பெறப்படும் என பிரதமர் ஷின்சே அபே அறிவித்துள்ளார்.

உலகின் பல நாடுகளை போலவே ஜப்பானிலும் கரோனா வைரஸை கட்டுப்படுத்த ஊரடங்கு பிரகடனப்படுத்தப்பட்டு அவசர நிலை அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 16-ம் தேதி முதல் ஜப்பானில் 47 மாகாணங்களில் ஊரடங்கை நீட்டித்து உத்தரவிடப்பட்டது. பின்னர் மீண்டும் ஊரடங்கு நீடிக்கப்பட்டது.

மே 7-ல் ஜப்பான் இயல்பு நிலைக்குத் திரும்புவது கடினம் என்பதால் அதன்ப பிறகும ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இதற்கான உத்தரவை ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே பிறப்பித்தார்.

ஜப்பானின் டோக்கியோ நகரில் வரும் ஜூலை 24-ம் தேதி முதல் ஆகஸ்ட் 9-ம் தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது.

முன்னதாக ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டிகள் முழுமையாக நடத்தப்பட வேண்டும் என்றும் அனைத்து விளையாட்டு வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் பாதுகாப்பாக உணர வேண்டியது அவசியம் என்றும் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தாத வரை ஒலிம்பிக் போட்டிகளை நடத்த இயலாது என ஜப்பான் முன்னரே தெரிவித்துவிட்டது.

இந்தநிலையில் ஜப்பானில் கரோனா பரவும் வேகம் சற்று குறையத் தொடங்கியுள்ளது. இதனையடுத்து ஊரடங்கு அவசர நிலையை திரும்ப பெறவுள்ளதாக பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் ஜப்பானின் அனைத்து பகுதிகளிலும் ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்படுகிறது. அதேசமயம் முககவசம் அணிவது, சமூக விலகல் உள்ளிட்டவை கட்டாயமாக்கப்பட்டும் எனத் தெரிகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

34 mins ago

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

சுற்றுலா

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்