கல்வி கடனுக்கான 3 மாத வட்டி: ஹரியாணா அரசு செலுத்துகிறது

By செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக ஹரியாணா மாநில மக்களுக்கு முதல்வர் மனோகர் லால் கட்டார் தொலைக்காட்சி மூலம் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

கரோனா வைரஸால் மாநிலத்தின் நிதி வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனினும், மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக அவர்களுக்கு தேவையான உதவிகளை அரசு செய்து வருகிறது. பொருளாதார பாதிப்பு காரணமாக ஒருவர்கூட உணவு இல்லாமல் இருக்கக் கூடாது என்பதற்காக மாநில அரசு ரூ.636 கோடி ரூபாய் அளவுக்கு கடந்த 3 மாதங்களாக மக்களுக்கு உதவிகளை செய்து வருகிறது.

இந்த ஆண்டு கல்வியை முடித்தவர்கள் வங்கிகளில் வாங்கிய கல்விக் கடனுக்கான 3 மாத வட்டியை மாநில அரசு செலுத்தும். அதேபோல, கடந்த ஆண்டு கல்வியை முடித்து கரோனா வைரஸ் பாதிப்பால் இன்னும் வேலை கிடைக்காத அல்லது தொழில் தொடங்க முடியாத நிலையில் உள்ளவர்களின் கல்வி கடனுக்கான 3 மாத வட்டியையும் அரசு செலுத்தும். இதன் மூலம் 36 ஆயிரம் மாணவர்கள் பயனடைவார்கள். இதற்காக, மாநில அரசுக்கு ரூ.40 கோடி செலவாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

22 mins ago

தமிழகம்

31 mins ago

விளையாட்டு

26 mins ago

கல்வி

46 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்