ஆந்திராவில் கணவரின் உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் எதிர்ப்பு: விடிய விடிய சாலையில் காத்திருந்த மனைவி

By என்.மகேஷ்குமார்

ஆந்திராவில் உடல் நலக்குறை வால் தற்கொலை செய்து கொண்ட கணவரின் உடலை சொந்த ஊரில் அடக்கம் செய்ய உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், செய்வ தறியாது சாலையில் கணவரின் உடலுடன் விடிய விடிய அவரது மனைவி மற்றும் மகன் அழுதபடி காத்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், விஜயவாடா அருகே உள்ள மோபிதேவி லங்கா கிரா மத்தைச் சேர்ந்த கார் ஓட்டுநர் வெங்கடேஸ்வர ராவ் (42). இவ ருக்கு நாகலதா என்கிற மனைவி யும், 6 வயதில் ஒரு மகனும் உள்ள னர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வெங்கடேஸ்வர ராவின் குடும்பம், பிழைப்பு தேடி கிருஷ்ணா மாவட்டம், பெத்த புலிபாக்கா கிராமத்திற்கு சென்ற னர். இந்நிலையில், உடல்நிலை சரியில்லாததால் வெங்கடேஸ் வர ராவ் கடந்த செவ்வாய்க் கிழமை விஷம் குடித்து தற் கொலை செய்து கொண்டார்.

வெங்கடேஸ்வர ராவின் உடலை ஒரு ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊருக்கு கொண்டு வந் தார் நாகலதா. ஆனால், அங்கு உடலை அடக்கம் செய்ய அவரது உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஊரில் கரோனா வைரஸ் தொற்று இருப்பதால் தற்கொலை செய்து கொண்ட வரின் உடலை அடக்கம் செய்யக் கூடாது என உறவினர்கள் திட்ட வட்டமாக கூறிவிட்டனர்.

இதைத் தொடர்ந்து, ஆம்பு லன்ஸ் ஊழியர்கள் உடலை சாலையில் இறக்கி வைத்து விட்டு சென்றுவிட்டனர். அப் போது என்ன செய்வதென்று தெரியாமல் தனது கணவரின் உடலுடன் நாகலதா விடிய விடிய அழுதபடி உட்கார்ந் திருந்தார். உடன் அவரது மகனும் அழுது கொண்டிருந்தார்.

பிரேதப் பரிசோதனை

இதுகுறித்து கிராம வருவாய் அலுவலர், போலீஸாருக்கு தக வல் கொடுத்தார். அதன் பேரில் அங்கு சென்ற போலீஸார் நாகல தாவிடம் விசாரணை நடத்தினர். பின்னர், வெங்கடேஸ்வர ராவின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனை செய்ய அரசு மருத் துவமனைக்கு கொண்டு சென்ற னர். கரோனா தொற்று இருக்கும் கிராமத்தில் உடலை அடக்கம் செய்யவிடாமல் கிராமத்தை விட்டு விரட்டிய சம்பவம் மனிதாபி மானத்தையே கேள்விக் குறி யாக்கி உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

இந்தியா

22 mins ago

சினிமா

32 mins ago

தமிழகம்

48 mins ago

கருத்துப் பேழை

56 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

37 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

விளையாட்டு

2 hours ago

மேலும்