உத்தராகண்ட் நிவாரண முகாமில் தொழிலாளர் மரணம்: பட்டினிச் சாவு என குடும்பத்தினர் கடும் குற்றச்சாட்டு- விசாரணைக்கு உத்தரவு

By பிடிஐ

உத்தராகண்ட் மாநில ரூர்கி புலம்பெயர் தொழிலாளர் நிவாரண முகாமில் சிக்கிய 42 வயது தொழிலாளர் ஒருவர் மரணமடைந்தார். இவர் பட்டினியால் மரணமடைந்ததாக குடும்பத்தினர் பகீர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

அலிகரைச் சேர்ந்த நேத்ரபால் என்ற இந்த நபரின் மரணம் தொடர்பாக மேஜிஸ்ட்ரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

வெந்தும் வேகாத சோறை அளித்த்தால் அவரால் சாப்பிட முடியாமல் அவர் சாப்பிடுவதையே நிறுத்தி விட்டார் என்று அலிகாரில் உள்ள இவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

மரணமடைந்த நேத்ரபால் என்ற இந்த நபர் ரிஷிகேசில் சலூன் ஒன்றில் முடிதிருத்துபவராகப் பணியாற்றி வந்தார். ஹோலிக்காக உ.பி.யில் உள்ள தன் குடும்பத்தினரைப் பார்க்க வந்துள்ளார். பிறகு மார்ச் 18ம் தேதி ரிஷிகேசுக்கே திரும்பியுள்ளார்.

லாக்-டவுன் உத்தரவினால் வேலையை இழந்த நேத்ரபால் மீண்டும் அலிகாருக்கே மார்ச் 28ம் தேதி வர முயன்றார். ஒருநாள் நடைப்பயணத்துக்குப் பிறகு ரூர்கி அருகே ஒரு கிராமத்தில் தங்கியுள்ளார். அங்கு அவருக்கு உணவு வழங்கப்பட்டது. ஆனால் சில மணி நேரத்திலேயே போலீஸ் இவரை நிவாரண முகாமுக்கு இட்டுச் சென்றனர்.

இவரது மகன் அஜய் கூறும்போது கடைசியாக ஏப்ரல் 15ம் தேதி எங்களை அழைத்த தந்தை வயிற்று வலி இருப்பதாகத் தெரிவித்தார் என்றார். ஏப்ரல் 16ம் தேதி நேத்ரபால் பரிதாபமாக மரணமடைந்துள்ளார்.

மேலும் போலீஸார் இவரது மரணத்தை மறைத்ததாக குடும்பத்தினர் புகார் எழுப்பியுள்ளனர். நேத்ரபாலுக்கு மனைவி மற்றும் 5 குழந்தைகள் உள்ளனர்.

“நாங்கள் வெள்ளிக்கிழமை முதல் எதுவும் சாப்பிடவில்லை. ஆனால் எங்கள் தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என்று உறுதியளித்துள்ளனர்” என்றார் நேத்ரபால் மகன் அஜய்.

இவர் மரணத்தையடுத்து நேத்ரபால் குடும்பத்துக்கு உடனடியாக உதவி வழங்கிட உத்தரகாண்ட் முதல்வருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இவர் பட்டினியால் மரணமடைந்தார் என்று குடும்பத்தினர் குற்றம்சாட்டியதையடுத்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

சினிமா

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

5 hours ago

வலைஞர் பக்கம்

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

7 hours ago

ஜோதிடம்

6 hours ago

மேலும்