டெல்லி வன்முறை தொடர்பாக மார்ச் 11-ம் தேதி நாடாளுமன்றத்தில் விவாதம்;  பதிலளிக்கிறார் அமித் ஷா

By செய்திப்பிரிவு

டெல்லி வன்முறை சம்பவங்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் மார்ச் 11-ம் தேதி விவாதம் நடைபெறுகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விவாத்தில் பங்கேற்று பதிலளிக்கிறார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த அமர்வு தொடங்கியது முதலே டெல்லி கலவரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மக்களவையில் நேற்று சபாநாயகர் இருக்கைக்கு சென்று பேப்பர்களை பறித்த காங்கிரஸ் எம்.பி.க்கள் 7 பேர் இந்த கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்றத்தில் அலுவல்கள் ஏதும் எடுக்கப்படாமல் முடங்கியுள்ளது. நாடாளுமன்றம் ஹோலி விடுமுறைக்கு பிறகு வரும் மாரச் 1-ம் தேதி மீண்டும் கூடுகிறது.

காங்கிரஸ் எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக
அக்கட்சியின் மக்களவை குழுத் தலைவர் ஆதிரஞ்சன் சவுத்திரி பேசினார்

அப்போது எதிர்க்கட்சிகளின் வேண்டுகோளை ஏற்று டெல்லி வன்முறை தொடர்பாக விவாதம் நடைபெறும் என சபாநாயகர் ஓம்.பிர்லா அறிவித்துள்ளார். மேலும் விவாதத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டு பதிலளிக்கவுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

கல்வி

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

இந்தியா

5 hours ago

க்ரைம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

10 hours ago

சினிமா

10 hours ago

கல்வி

11 hours ago

மேலும்