குடிமகன் என்பதற்கான ஆவணங்களைக் கேட்டு சிறுபான்மையினருக்குத் தொந்தரவு: மகாராஷ்டிரா நவ்நிர்மாண் சேனா மீது வழக்கு

By பிடிஐ

குடிமகன் என்பதற்கான ஆவணங்களைக் கேட்டு சிறுபான்மையினருக்குத் தொந்தரவு கொடுத்ததாக மகாராஷ்டிரா நவ்நிர்மாண் சேனா அமைப்பினர் 8 பேர் மீது புனே போலீஸார் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

கடந்த வாரம் புனேவில் மகாராஷ்டிரா நவ்நிர்மாண் கட்சியினர் நகரில் சட்டவிரோதமாகக் குடியேறிய வங்கதேசத்தவர் இருக்கிறார்களா என்று தாமாகவே ஆய்வில் ஈடுபட்டிருக்கின்றனர்.

அப்போது, அவர்கள் பாலாஜி நகர் பகுதியில் அவர்கள் ரோஷன் ஷேக் (35) என்ற நபரின் வீட்டினுள் அத்துமீறி நுழைந்துள்ளனர். அவரிடம் குடியுரிமைக்கான ஆதாரங்களைக் கேட்டு மிரட்டியுள்ளனர்.

அந்த நபர் தான் வங்கதேசத்தவர் அல்ல மேற்குவங்கத்தைச் சேர்ந்தவர் என்று கூறியுள்ளார். மேலும், தொழில் நிமித்தமாகவே தான், புனேவில் தங்கியுள்ளதாகவும் தெரிவித்துளார்.

இது தொடர்பான ஆவணங்களைக் காட்டியும் வந்திருந்தவர்கள் ரோஷனை தொடர்ந்து மிரட்டியுள்ளனர். மேலும், ரோஷன் மற்றும் அவருடன் தங்கியிருந்த இருவரையும் காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

காவல் நிலையத்தில் ரோஷனும் அவருடன் வந்தவர்களும் இந்தியர்களே சட்டவிரோத குடியேறிகள் இல்லை என்பது உறுதியானது. பின்னர், மகாராஷ்டிரா நவ்நிர்மாண் சேனா கட்சியினர் கலைந்து சென்றனர்.

ஆனால், தான் துன்புறுத்தப்பட்டது குறித்து ரோஷன் ஷேக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரின் புகாரின் அடிப்படையில் மகாராஷ்டிரா நவநிர்மாண் கட்சியைச் சேர்ந்த 8 பேர் மீது சட்டப்பிரிவுகள் 143, 147, 149, 448, 506 ஆகியனவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மும்பையில் பிப்ரவரி 9-ம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் மகாராஷ்டிரா நவ்நிர்மாண் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே பேசும்போது இந்தியாவுக்குள் ஊடுருவியுள்ள வங்கதேசத்தவர் மற்றும் பாகிஸ்தான் நாட்டவரை வெளியேற்ற வேண்டும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

சினிமா

1 hour ago

சுற்றுச்சூழல்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

5 hours ago

வலைஞர் பக்கம்

6 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

7 hours ago

ஜோதிடம்

6 hours ago

மேலும்