‘‘ஷீலா தீட்சித் காலத்திலும் டெல்லியில் தோல்வி’’ - சிதம்பரத்தை தொடர்ந்து சாக்கோ கருத்தால் காங்கிரஸில் மோதல்

By செய்திப்பிரிவு

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்தின் ட்வீட் சொந்த கட்சிக்குள்ளேயே கடும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஆம் ஆத்மி வெற்றியடைந்துள்ளது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த டெல்லி மக்கள் பிரித்தாளும் மோசமான சித்தாந்தத்தைக் கொண்ட பாஜகவைத் தோற்கடித்துள்ளனர். 2021 மற்றும் 2022-ம் ஆண்டுகளில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் மக்கள் யாரைத் தேர்ந்தெடுக்கவேண்டும் என்பதைக் காட்டியதற்காக டெல்லி மக்களுக்கு மரியாதை செலுத்துகிறேன்" என்று பதிவிட்டிருந்தார்.

இதற்கு முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மகளும் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரும், மஹிளா காங்கிரஸின் முக்கியப் பொறுப்பாளருமான சர்மிஷ்டா முகர்ஜி தான் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

சர்மிஷ்டா முகர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில், "டெல்லி தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்துள்ளது. ஆனால், நீங்களோ ஆம் ஆத்மி வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறீர்கள்.

தங்களுக்கு தகுந்த மரியாதையை உரித்தாக்கி ஒரு கேள்வியை முன்வைக்கிறேன். காங்கிரஸ் ஒருவேளை பாஜகவை தோற்கடிக்க மாநிலக் கட்சிகளை அவுட்சோர்ஸிங் முறையில் நியமித்துள்ளதா? அப்படியில்லை என்றால் எதற்காக நம் தோல்வியைப் பற்றி கவலைப்படாமல் ஆம் ஆத்மியைக் கொண்டாட வேண்டும்? ஒருவேளை என் கேள்விக்கு பதில் ஆம் என்றால் நாம் ஏன் கட்சியை மூடிவிட்டுச் செல்லக்கூடாது!" என்று பதிவிட்டுள்ளார்.

இதுமட்டுமின்றி காங்கிரஸ் மூத்த தலைவர் சாக்கோ டெல்லி தேர்தல் தோல்வி குறித்து கருத்து தெரிவித்ததார். அப்போது டெல்லியில் ஷீலா தீட்சித் முதல்வராக இருந்தபோதே காங்கிரஸ் தோல்வியை தழுவியுள்ளது என அவர் கூறியதாக தகவல் வெளியானது. ஆனால் இதனை அவர் மறுத்துள்ளார்.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் சாக்கோ கூறியதாவது:

‘‘முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் காலத்திலேயே காங்கிரஸ் தோற்று இருப்பதாக நான் கூறவில்லை. வேண்டுமென்றே என் மீது அவதூறு கிளப்பப்படுகிறது. காங்கிரஸில் உள்ள ஒரு சிலர் திட்டமிட்டே எனக்கு எதிராக பிரச்சாரம் செய்கின்றனர். 2013-ம் ஆண்டு மட்டுமல்ல காங்கிரஸ் 2014, 2015, 2017 என பல தேர்தல்களில் தோல்வியைத் தழுவியுள்ளது. ’’ எனக் கூறினார்.

தவறவிடாதீர்

தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில் கலசத்துக்கு தங்க முலாம் பூச வீட்டை அடமானம் வைத்த கோவை தொழில்முனைவர்

ராமேசுவரம் மீனவர்கள் 11 பேர் நிபந்தனைகளுடன் விடுதலை: படகை இலங்கை அரசுடமையாக்கி உத்தரவு

பாலியல் வன்கொடுமை வழக்கு: மகளிர் நீதிமன்றத்துக்கு மாற்றம்

புதுக்கோட்டை மாவட்டத்துக்கு காவிரி உபரிநீரை திருப்பிவிட பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு: முதல்வர் உறுதி அளித்ததாக விவசாயிகள் தகவல்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

சினிமா

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

8 hours ago

வாழ்வியல்

8 hours ago

தமிழகம்

9 hours ago

ஆன்மிகம்

8 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

மேலும்