இடஒதுக்கீட்டுக்கு எதிராக அறிவிப்பு வெளியிட்ட உத்தரகண்ட் காங்கிரஸ் அரசு: ராஜ்நாத் சிங் விமர்சனம்

By செய்திப்பிரிவு

உத்தரகண்ட் அரசு 2012-ம் ஆண்டு இடஒதுக்கீடு வழங்காமல் அறிவிக்கை வெளியிட்டபோது அந்த மாநிலத்தில் பதவியில் இருந்தது காங்கிரஸ் தற்போது இந்த விவகாரத்தை அரசியலாக்குகிறது என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் விமர்சித்தார்.

உத்தரகண்ட் மாநில அரசு கடந்த 2012-ம் ஆண்டு, செப்டம்பர் 5-ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில் சில அரசுப் பணியிடங்களை நிரப்ப எஸ்சி,எஸ்டி இட ஒதுக்கீடு இல்லாமல் அறிவித்தது. இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் அந்த அறிவிப்பை ரத்து செய்து இட ஒதுக்கீட்டுடன் அறிவிப்பு வெளியிட உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்றத்தில் உத்தரகண்ட் அரசு சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அரசு வேலைவாய்ப்புகளில் எஸ்.ஸி, எஸ்.டி, ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை, இடஒதுக்கீடு வழங்கிடக் கோரி நீதிமன்றம் உத்தரவிட முடியாது என தீர்ப்பளித்தனர்.

இதையடுத்து உத்தரகண்ட் பாஜக அரசு திட்டமிட்டு இடஒதுக்கீட்டை சீர்குலைக்க நடவடிக்கை எடுப்பதாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது. இந்த விவகாரம் மக்களவையிலும் புயலை கிளப்பியது. காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சி எம்.பி.க்கள் இந்த பிரச்சினையை எழுப்பி இடஒதுக்கீட்டை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இதற்கு பதிலளித்ததாவது:

உத்தரகண்ட் மாநில அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதற்கும் மத்திய அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால் இதனை காங்கிரஸ் கட்சி வேண்டுமென்றே அரசியலாக்குகிறது.

உத்தரகண்ட் அரசு 2012-ம் ஆண்டு இடஒதுக்கீடு வழங்காமல் அறிவிக்கை வெளியிட்டபோது அந்த மாநிலத்தில் பதவியில் இருந்தது காங்கிரஸ். இடஒதுக்கீடு வழங்க வேண்டாம் என்ற முடிவை எடுத்தது காங்கிரஸ்.

ஆனால் தற்போது இதனை மத்திய அரசுடன் தொடர்பு படுத்தி காங்கிரஸ் கட்சி அரசியலாக்குகிறது. இது தொடர்பாக சமூகநீதித்துறை அமைச்சர் விரைவில் அறிக்கை அளிப்பார். அதுவரை எம்.பி.க்கள் பொறுமை காக்க வேண்டும்.

இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.

தவறவிடாதீர்

நடிகர் விஜய்க்கு வருமான வரித்துறை சம்மன்: இன்று ஆஜர் ஆவாரா?

தேவைப்பட்டால் மேலும் சில வங்கிகள் இணைக்கப்படும்: நிதித் துறை இணை அமைச்சர் தகவல்

மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடாக ரூ.35,000 கோடி: விரைவில் வழங்க மத்திய அரசு திட்டம்

தொழில் நிறுவனங்களுக்கு உதவவே மத்திய அரசு விரும்புகிறது: நிர்மலா சீதாராமன் தகவல்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

2 mins ago

க்ரைம்

46 mins ago

தமிழகம்

36 mins ago

இந்தியா

54 mins ago

வாழ்வியல்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

உலகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்