இலங்கை பிரதமரான பின் முதல்முறையாக  இந்தியா வந்தார் மகிந்தா ராஜபக்சே

By பிடிஐ

இலங்கை நாட்டின் பிரதமரானபின் அதிகாரபூர்வமாக மகிந்தா ராஜபக்சே 4 நாட்கள் பயணமாக இன்று புதுடெல்லி வந்தார். அவருக்கு மத்திய அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இலங்கைப் பிரதமர் மகிந்தா ராஜபக்சே 4 நாட்கள் பயணமாகப் புதுடெல்லிக்கு இன்று மாலை வந்தார். அவரை விமானநிலையத்தில் மத்திய மனித வளமேம்பாட்டுத்துறை இணையமைச்சர் சஞ்சய் தோட்ரே பூங்கொத்து வரவேற்றார்.

நாளை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரைச் சந்திக்கும் பிரதமர் ராஜபக்சே, நண்பகலில் பிரதமர் மோடியைச் சந்திக்க உள்ளார்., அதன்பின் குடியுரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் சிறப்பான வரவேற்பு அளித்து விருந்து அளிக்கிறார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அதிபராக கோத்தபய ராஜபக்சே பதவி ஏற்றபின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசியப்பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இருவரும் இலங்கை அதிபரைச் சந்தித்துப் பேசினர். அப்போது, இலங்கைக்கு 450கோடி டாலர் இந்தியா சார்பில் கடனுதவி வழங்கப்படும் என அறிவித்தனர்

பிரதமர் மோடி, பிரதமர் மகிந்தா ராஜபக்சே இடையே நடக்கும் இந்த சந்திப்பில் இரு நாட்டு கடல்சார் பாதுகாப்பு, ஒத்துழைப்பு, அரசியல், வர்த்தகம், மேம்பாடு, கலாச்சாரம், சுற்றுலா ஆகியவை குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது. இருநாடுகளுக்கும் இடையிலான கூட்டுறவு மேம்பாட்டுக்கு சந்திப்பில் முக்கியத்துவம் அளிக்கப்படும் எனத் தெரிகிறது.

பிரதமர் மகிந்தா ராஜகபக்சேயின் இந்தியப் பயணத்தை இலங்கையில் உள்ள தமிழ் அரசியல் தலைவர்கள் கூர்ந்து கவனித்து வருகின்றனர். இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் மறுவாழ்வுத் திட்டங்களை வேகமாக நிறைவேற்ற வேண்டும் என்று மத்திய அரசு எதிர்பார்க்கிறது.

பிரதமர் மகிந்தா ராஜபக்சேவுடன் வந்துள்ள, மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தி இந்துவிடம்(ஆங்கிலம்) கூறுகையில், " இலங்கையின் கிழக்கு மற்றும் வடக்குப் பகுதியில் அதிகமான வீடுகளைக் கட்டிக்கொடுக்கக் கூறி இந்தியாவிடம் இலங்கை கோரும். ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு தேவையான தொழில்நுட்ப வசதிகளை வழங்குமாறும் கேட்போம். இரு நாட்டு மீனவர்களுக்கு இடையே நீடிக்கும் பிரச்சினைகளைத் தீர்க்க மீனவப்பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தப்படும்" எனத் தெரிவித்தார்

தவறவிடாதீர்.

மனைவி, குழந்தைகள் உட்பட 5 பேரைக் கொலை செய்த குற்றவாளிக்கு நிறைவேறியது மரண தண்டனை

நாளை2-வது போட்டி: ஒருநாள் தொடரைத் தக்கவைக்குமா இந்திய அணி? வீரர்கள் மாற்றத்துக்கு வாய்ப்பு: 6.8 அடி உயர நியூஸி. பந்துவீச்சாளர் அறிமுகம்

மலேசியாவில் இருந்து பாமாயில் இறக்குமதிக்கு கட்டுப்பாடா? - மத்திய அமைச்சர் விளக்கம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

8 hours ago

ஓடிடி களம்

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்