நிறுவன வரி குறைப்பால் ரூ.1 லட்சம் கோடி இழப்பு

By செய்திப்பிரிவு

நிறுவன வரி தொடர்பாக மத்திய அரசுக்கு ரூ.1.45 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்று கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போதைய கணக்கீட்டின்படி ரூ.1 லட்சம் கோடி அளவில் இழப்பு ஏற்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியா பொருளாதாரச் சரிவை எதிர்கொண்டு வருகிற நிலையில், முதலீடுகளை அதிகரிக்கச் செய்யும் நோக்கில் நிறுவனங்களுக்கான நிறுவன வரியை மத்திய அரசு கடந்த ஆண்டு 30 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாகக் குறைத்தது. அதேபோல் 2019 அக்டோபர் மாதத்துக்குப் பிறகு புதிதாக தொடங்கப்படும் உற்பத்தி நிறுவனங்களுக்கான நிறுவன வரி 25 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. இதனால் நிறுவனங்கள் மூலமாக கிடைக்கும் வரி வருவாய் பாதிக்கப்படும். ஆண்டுக்கு ரூ.1.45 லட்சம் கோடி அரசுக்கு வரி வருவாய் இழப்பு ஏற்படும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் நிறுவன வரி குறைப்பால் ரூ.1 லட்சம் கோடி அளவிலேயே இழப்பு ஏற்படும் என்று அரசு தற்போது தெரிவித்துள்ளது. இந்த வரி வரம்பை ஏற்கும் நிறுவனங்களுக்கு வேறெந்த வரிச் சலுகையும் வழங்கப்படாது என்று கூறப்பட்டது. இந்நிலை யில் சில நிறுவனங்கள் புதிய வரி வரம்பை ஏற்பதா அல்லது நடைமுறையில் இருக்கும் வரி வரம்பிலேயே தொடரலாமா என்ற குழப் பத்தில் உள்ளன. 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

வாழ்வியல்

45 mins ago

சினிமா

57 mins ago

சினிமா

5 hours ago

தமிழகம்

5 hours ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்