இளையராஜாவுக்கு ஹரிவராசனம் விருது: சபரிமலை சன்னிதானத்தில் வழங்கப்பட்டது

By செய்திப்பிரிவு

மத நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டுக்காக அதிக பங்களிப்பு அளித்தவர்களுக்கு ஹரிவராசனம் விருதை கேரளா அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறது. 2020-க்கான விருது இளையராஜாவுக்கு வழங்கப்பட்டது.

இன்று சபரிமலை சன்னிதானத்தில் வைத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் இளையராஜாவுக்கு ஹரிவராசனம் விருது வழங்கப்பட்டது. இந்த விருதில் ரூ.1 லட்சம் பணம், சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி கவுரவிக்கப்படும்.

கடந்த 2019-க்கான ஹரிவராசனம் விருது பாடகி பி.சுசிலாவுக்கு வழங்கப்பட்டது. 2020-ம் ஆண்டுக்கான ஹரிவராசனம் விருதை இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு அறிவிக்கப்பட்டது.

இதே நிகழ்ச்சியில் இளையராஜாவுக்கு ‘வணக்கத்துக்குரிய இசைஞானி’ என்ற பட்டமும் வழங்கப்பட்டது.

ஹரிவராசனம் விருது பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கே.ஜே. ஏசுதாஸ், கே.எஸ்.சித்ரா உள்ளிட்டோருக்கும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 mins ago

வர்த்தக உலகம்

12 mins ago

தமிழகம்

38 mins ago

சினிமா

33 mins ago

இந்தியா

55 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்