கேரளாவின் மராடுவில் சட்டவிரோத அடுக்குமாடிக் கட்டிடம் தகர்ப்பு

By பிடிஐ

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி வெடிகுண்டுகளைப் பயன்படுத்தி மராடுவில் 55 மீட்டர் உயரமுள்ள மேலும் ஒரு அடுக்குமாடிக் கட்டிடம் இன்று இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.

கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் கடலோர ஒழுங்குமுறை மண்டல (சிஆர்இசட்) விதிகளை மீறியதற்காக மராடு அடுக்குமாடிக் கட்டிடங்களை இடிக்கும்படி, கடந்த மே 8-ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை அடுத்து குடியிருப்பில் உள்ளவர்கள் யாரும் காலி செய்யாததால் கேரள அரசு கட்டிடத்தை இடிக்க இயலாத நிலை ஏற்பட்டது.

கடந்த செப்டம்பர் 27-ம் தேதி அன்று இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் அருண் மிஸ்ரா மற்றும் ரவீந்திர பாட் ஆகியோர் அடங்கிய அமர்வு, மராடு அடுக்குமாடிக் குடியிருப்புகளை 138 நாட்களுக்குள் இடிக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு மாநில அரசு தலா 25 லட்சம் ரூபாய் இடைக்கால இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

ரூ .25 லட்சம் இடைக்கால இழப்பீடு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த அந்த அடுக்குமாடி குடியிருப்புகளின் உரிமையாளர்கள், இடிப்பதைத் தடுப்பதற்கான கடைசி போராட்டம் வீணாக முடிவடைந்ததைத் தொடர்ந்து அக்டோபர் முதல் வாரத்தில் வளாகத்தை விட்டு வெளியேறினர்.

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, மராடு நகராட்சியில் அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டிடங்களை இடிக்கும் பணி நேற்று காலையில் தொடங்கியது. மராடு நகராட்சியில் அமைந்துள்ள ஹோலி ஃபெய்த் எச் 20 குடியிருப்புக் கட்டிடம் இன்று காலை 11.18 மணிக்கு இடிக்கப்பட்டது, அதைத் தொடர்ந்து ஆல்ஃபா செரீன் குடியிருப்பின் இரட்டைக் கோபுரங்கள் சில நிமிடங்களுக்குப் பிறகு இடிக்கப்பட்டன.

55 மீட்டர் உயரமான ஜெயின் பவள கோவ் கட்டிடம் தகர்ப்பு

நேற்று ஹெச்2ஓ ஹோலி பெய்ஃத் மற்றும் ஆல்ஃபா செரீன் இரண்டு குடியிருப்பு வளாகங்கள் இடிக்கப்பட்ட நிலையில் இன்று மேலும் ஒரு சட்டவிரோத ஏரி அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடிக்கப்பட்டது.

கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட 55 மீட்டர் உயரமான ஜெயின் பவள கோவ் கட்டிடம், காலை 11.03 மணியளவில் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. 200 மீட்டர் சுற்றளவில் உள்ள பகுதியில் அனைத்து வகையான போக்குவரத்திற்கும் தடை விதிக்கப்பட்டது.

குடியிருப்பு வளாகப் பகுதிகளைச் சுற்றியுள்ள இடங்கள் அனைத்தும் 8 மணிக்கு வெளியேற்ற மண்டலத்தில் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டு 144 தடை விதிக்கப்பட்டது. அருகிலுள்ள குடியிருப்பாளர்கள் அனைவரும் இந்த கட்டிடத் தகர்ப்புப் பணிக்காக வெளியேற்றப்பட்டனர்.

அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் பிற கட்டிடங்களின் மாடிகளில் நின்றபடி ஏராளமான மக்கள் இந்த அதிர்ச்சியூட்டும் காட்சியைக் கண்டனர்.

இதன் மூலம், சி.ஆர்.இசட் மீறல்களுக்காக உச்ச நீதிமன்றத்தால் இடிக்க உத்தரவிடப்பட்ட நான்கு சொகுசு வளாகங்களில் மூன்று இடிக்கப்பட்டுள்ளன. மும்பை-பேட் எடிஃபிகஸ் இன்ஜினியரிங் தென்னாப்பிரிக்காவை தளமாகக் கொண்ட ஜெட் இடிப்பு நிபுணர்களின் உதவியுடன் இந்த குண்டு வெடிப்பை நடத்தியது.

இதுகுறித்து எர்ணாகுளம் மாவட்ட ஆட்சியர் எஸ்.சுஹாஸ் இடிந்த பின்னர் நகர போலீஸ் கமிஷனர் விஜய் சாகரேவுடன் அந்த இடத்தை பார்வையிட்ட பின்னர் கூறுகையில், ''இது ஒரு சரியான தகர்ப்புமுறை. ஏரியில் ஒரு குப்பைகள் கூட விழுந்ததில்லை'' என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

விளையாட்டு

29 mins ago

க்ரைம்

33 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

சுற்றுலா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்