இந்தியா, சீனா இடையே 70 ஆண்டு நல்லுறவை கொண்டாட முடிவு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி

இந்தியா, சீனா இடையே கடந்த 70 ஆண்டுகளாக நீடித்து வரும் நல்லுறவைக் கொண்டாட இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன.

கடந்த மாதம் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சந்தித்து பேசினர். அப்போது இரு நாடுகளிடையே 70 ஆண்டுகளாக நீடித்து வரும் நல்லுறவைக் கொண்டாடுவதற்கு முடிவு செய்யப்பட்டது. தமிழகத்துக்கும், சீனாவின் புஜியான் மாகாணத்துக்கும் இடையே 2 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு கடல் வாணிபத் தொடர்பு இருந்தது குறித்தும் மாமல்லபுரம் சந்திப்பின்போது விவாதிக்கப்பட்டது.

இந்நிலையில் இரு நாடுகளிடையே 70 ஆண்டுகளாக நீடித்து வரும் அரசியல், வர்த்தக நல்லுறவை இரு நாடுகளும் இணைந்து கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த விழாக் கொண்டாட்டங்கள், 2020-2021-ம் ஆண்டுகளில் நடைபெறும். இதையொட்டி இந்தியாவில் சீனா-இந்தியா வர்த்தகம் மற்றும் முதலீட்டுக் கழக அமைப்பை சீனா ஏற்படுத்தவுள்ளது.

மேலும் 2-வது சீனா-இந்தியா மருந்துக் கட்டுப்பாட்டு மாநாட்டையும் நடத்தவுள்ளது. அதைப் போலவே சீனாவில், மருந்துகள் தொடர்பான சிறப்பு நிகழ்ச்சியை இந்தியா நடத்தும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. – பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

20 mins ago

இந்தியா

26 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

48 mins ago

சினிமா

55 mins ago

விளையாட்டு

1 hour ago

வணிகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

ஓடிடி களம்

2 hours ago

கல்வி

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்