''மோட்டார் தொழில் நெருக்கடிக்கு தீர்வு காணுங்கள்'' - கர்நாடகாவில் மாணவர்கள் ஷூவுக்கு பாலிஷ் போடும் போராட்டம் 

By செய்திப்பிரிவு

ஷிவமுகா,

மோட்டார் தொழிலில் மிகப்பெரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால் பொருளாதார பாதிப்பு, வேலைவாய்ப்பின்மை ஏற்பட்டுள்ளதாகக் கூறி கர்நாடகாவில் மாணவர்கள் ஷூக்கு பாலிஷ் போடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மோட்டார் உற்பத்தி தொழிலில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை உணர்த்தும் வகையிலும், வேலைவாய்ப்பு திண்டாட்டத்தையும் குறிப்பிடும் வகையில் ஷிவமுகா நகரின் பேருந்து நிலையத்தில் ஷூக்கு பாலிஷ் போடுவது, பழங்கள் விற்பது போன்ற போராட்டங்களை இந்திய தேசிய மாணவர் யூனியன் அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் இன்று நடத்தினர்.

போராட்டத்தின்போது இந்திய தேசிய மாணவன் யூனியன் சங்க (என்.எஸ்.யு.ஐ) உறுப்பினர்கள், பழங்கள், போஸ்டர்கள் மற்றும் ஷூக்களை கையில் ஏந்திவந்தனர். அப்போது, ஆட்டோமொபைல் துறைகளில் வேலையின்மை மற்றும் பொருளாதார நெருக்கடிகள் குறித்து மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை அவர்கள் எழுப்பினர்.

கர்நாடகா மாநிலத்தில் பயிலும் பல்வேறு பொறியியல் மற்றும் எம்பிஏ கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.

போராட்டம் குறித்து என்.எஸ்.யு.ஐ உறுப்பினர் அப்துல் சத்தார் கூறுகையில்,

''நாட்டில் வேலையின்மை விகிதம் அதிகரித்து வருவதால் இங்கு ஒரு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இன்று படித்த இளைஞர்களுக்கு வேலை இல்லை, நாட்டில் ஒரு மிகப் பெரிய பிரச்சினை என்பதால் இவற்றிக்கு தீர்வு காணவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து என்.எஸ்.யு.ஐ அமைப்பு போராட்டக் களத்தில் இறங்கியுள்ளது.

ஆட்டோமொபைல் பட்டறைகள் மூடப்படுகின்றன. எல்லோரும் தெருவுக்கு வந்துவிட்டார்கள், ஆனால் இதற்கு தீர்வு காணும் வகையில் நமது பிரதமர் நரேந்திர மோடி எதுவும் செய்யவில்லை. எங்களுக்கு வேலைகள் இல்லாததால் நாங்கள் காலணிகளுக்கு பாலிஷ் போடுகிறோம்'' என்றார்.

இதுகுறித்து வின்யாஸ் என்ற எம்பிஏ படிக்கும மாணவர் ஏஎன்ஐயிடம் பேசுகையில்,

''தேர்தலுக்கு முன்னர் நாட்டில் 2 கோடி வேலை வாய்ப்புகளை வழங்குவதாக நமது பிரதமர் அறிவித்திருந்தார். ஆனால் எந்த வேலையும் வழங்கப்படவில்லை. மாணவர்கள் வேலை பெறுவதற்காக பல பட்டங்களை முடித்துள்ளனர், ஆனால் இந்த பட்டங்களும் வீணாகவேப் போகின்றன. மொத்த உள்நாட்டு உற்பத்தி மோசமாக உள்ளது, அதன் அடிப்படையில் மோடிஜி நாட்டில் வேலையின்மை விகிதத்தை அதிகரிக்கும் ஆட்டோமொபைல் துறை பட்டறைகளை மூடுகிறார். எங்கள் வங்கிக் கணக்குகளில் ரூ.15 லட்சம் அனுப்புவதாகவும் பிரதமர் உறுதியளித்தார், ஆனால் வாக்குறுதிகள் ஒருபோதும் நிறைவேற்றப்படவில்லை. ஆட்சியின் மோசமான கொள்கைகளின் பாதிப்பை இன்று இளைஞர்கள் அனுபவிக்கத் தொடங்கியுள்ளனர்.''

இவ்வாறு மாணவர் வின்யாஸ் தெரிவித்தார்.

-ஏஎன்ஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

8 mins ago

க்ரைம்

5 mins ago

இந்தியா

11 mins ago

தமிழகம்

33 mins ago

இந்தியா

40 mins ago

இந்தியா

52 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்