உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சபர்வால் காலமானார்

By பிடிஐ

உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி யோகேஷ் குமார் சபர்வால் டெல்லியில் நேற்று முன்தினம் மாலை காலமானார்.

73 வயதான சபர்வாலுக்கு சேத்தன், நித்தின் என்கிற 2 மகன்கள் உள்ளனர். இவரது உடல் டெல்லியில் நேற்று மாலை தகனம் செய்யப்பட்டது. ஒய்.கே.சபர்வால் கடந்த 2005-ம் ஆண்டு நவம்பர் 1 முதல் 2007-ம் ஆண்டு ஜனவரி 13 வரை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றினார்.

வழக்கறிஞராக பணியாற்றி வந்த சபர்வால் முதலில் 1986-ல் டெல்லி உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாகவும் 1987-ல் இதன் நிரந்தர நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார்.

பிறகு டெல்லி நீதிமன்றத்தில் இருந்து மும்பை உயர் நீதி மன்ற தலைமை நீதிபதியாக நியமிக் கப்பட்டார். 2001, ஜனவரி 28-ம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணியில் அமர்த்தப்பட்டார்.

பிஹார் சட்டப்பேரவை கலைக் கப்பட்டது சட்டவிரோதம் என 2006, ஜனவரில் வழங்கிய தீர்ப்பு உள்பட பல்வேறு முக்கிய தீர்ப்புகளை இவர் வழங்கியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

19 mins ago

விளையாட்டு

23 mins ago

இந்தியா

27 mins ago

உலகம்

34 mins ago

சினிமா

1 hour ago

வலைஞர் பக்கம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்