எப்போதும் மோடியை விமர்சித்துக் கொண்டிருப்பது உதவாது: காங். தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கருத்து

By செய்திப்பிரிவு

புதுடெல்லி:

அரசியல் ஆய்வாளர் கபில் சதீஷ் கோமிரெட்டி எழுதிய “Malevolent Republic: A Short History of the New India” என்ற நூல் அறிமுக விழாவில் கலந்து கொண்ட காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் மோடியை சதா விமர்சித்துக் கொண்டிருப்பது பயனளிக்காது என்று எதிர்க்கட்சிகளுக்கு சுட்டிக்காட்டினார்.

“2014 முதல் 2019 வரை மோடி ஆற்றிய பணிகளை நாம் அங்கீகரிக்க வேண்டிய நேரம் இது. அதனால்தான் அவர் மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளார்.

மக்களைச் சென்றடையக் கூடிய மொழியில் மோடி பேசுகிறார். மக்கள் புரிந்து கொள்ளக்கூடிய செயல்களை அவர் செய்து கொண்டிருக்கிறார் என்பதை நாம் புரிந்து கொள்ளாதவரை அவரை நாம் எதிர்கொள்ள முடியவே முடியாது. மேலும் இத்தகைய ஒரு விஷயம் கடந்த காலத்தில் நிகழவில்லை.

மேலும் சதா அவரை ஏதோ பிசாசாக பாவித்து விமர்சனம் செய்வது ஒரு போதும் உதவாது, இத்தகைய அணுகுமுறையில் நீங்கள் அவரை எதிர்கொள்ள முடியாது” என்று மோடிக்கு ஆதரவாகப் பேசியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

17 mins ago

விளையாட்டு

21 mins ago

இந்தியா

25 mins ago

உலகம்

32 mins ago

சினிமா

1 hour ago

வலைஞர் பக்கம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்