அருண் ஜேட்லி உடல்நிலை கவலைக்கிடம்? - மருத்துவர்கள் தீவிர சிகிச்சை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு மே மாதம் அருண் ஜேட்லிக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. கடந்த பாஜக ஆட்சியில் நிதியமைச்சராக இருந்த அவர் உடல்நலக் குறைவு காரணமாக இடைக்கால பட் ஜெட்டைகூட தாக்கல் செய்ய வில்லை. அவருக்குப் பதிலாக அமைச்சர் பியூஸ் கோயல் கடந்த பிப்ரவரியில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

உடல் நலக் குறைவை காரணம் காட்டி தேர்தலில் அவர் போட்டி யிடவில்லை. மத்தியில் பாஜக கூட் டணி அரசு மீண்டும் பதவியேற்ற நிலையில் அமைச்சரவையிலும் அவர் இணையவில்லை. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடியாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். இதய- நரம்பியல் பிரிவில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பிரதமர் நரேந்திர மோடி, சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் ஆகியோர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்று அப்போது அவரது உடல்நலம் குறித்து விசாரித்தனர்.

இந்தநிலையில் அவரது உடல்நிலை நேற்று திடீரென மோசமடைந்தது. தற்போது அவர் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் எய்ம்ஸ் மருத்துவமனை சார்பில் அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. இருப்பினும் அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளதால் அவருக்கு பல்துறை சார்ந்த மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர் உடல்நிலை மோசடைந்துள்ளதால் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், உள்துறை அமைச்சர் அமித் ஷா, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்று பார்த்தனர். அருண் ஜேட்லியின் உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் விசாரித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

சினிமா

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

5 hours ago

வலைஞர் பக்கம்

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

7 hours ago

ஜோதிடம்

6 hours ago

மேலும்