பயங்கரவாதத் தாக்குதலிலிருந்து பயணிகளை காப்பாற்றிய பஞ்சாப் பஸ் டிரைவர்

By ஐஏஎன்எஸ்

பஞ்சாப் மாநிலம் தினாநகரில் இன்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலிலிருந்து பஸ் டிரைவர் ஒருவர் பயணிகள் உயிரைக் காப்பாற்றியுள்ளார்.

தைரியமான அந்தக் காரியத்தைச் செய்தவர் பஞ்சாப் ரோடுவேஸ் ஓட்டுநர் நானக் சந்த் என்பவராவார். பயங்கரவாதிகள் பேருந்து மீது துப்பாக்கிச் சூடு நடத்திய போது, அஞ்சாத நானக் சந்த் பயங்கரவாதிகள் மீது பஸ்ஸை ஏற்றுமாறு அவர்களை நோக்கி ஓட்டியுள்ளார்.

உடனே பயங்கரவாதிகள் 4 பேரும் பின்வாங்க, பஸ்ஸை திசை மாற்றி ஓட்டிக் கொண்டு சென்றார் நானக் சந்த்.

பேருந்து மீது துப்பாக்கியால் சுட்டதால், பயணிகள் காயமடைந்திருப்பதை உணர்ந்த அவர் பஸ்ஸை நேராக அரசு மருத்துவமனைக்கு ஓட்டினார். பிறகு போலீஸுக்கும் தகவல் அனுப்பினார்.

இது குறித்து ‘தைரிய’ பஸ் டிரைவர் நானக் சந்த் கூறும்போது, “பேருந்தில் 75 பயணிகள் இருந்தனர். அவர்கள் உயிர்களைக் காப்பாற்றுவதுதான் முக்கியம் என்று என் மனதில் தோன்றியது. நான் பஸ்ஸை நிறுத்தவில்லை” என்றார்.

"அவரது தைரியம் பலரது உயிர்களைக் காப்பாற்றியுள்ளது. இல்லையென்றால், பயங்கரவாதிகளுக்கு பயணிகள் எளிதான இலக்காகியிருப்பர்” என்று பஞ்சாப் ரோடுவேஸ் பொதுமேலாளர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

31 mins ago

தமிழகம்

31 mins ago

சினிமா

35 mins ago

கல்வி

40 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சுற்றுலா

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்