பெங்களூரு மாநகராட்சியை 5 ஆக பிரித்து தேர்தல் நடத்த சித்தராமையா திட்டம்

By செய்திப்பிரிவு

பெங்களூரு மாநகராட்சியை 5 ஆக பிரித்து வரும் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் தேர்தல் நடத்த கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டமிட்டுள்ளார்.

கர்நாடகத்தில் கடந்த மே மாதம் நடைபெற்ற கிராம பஞ்சாயத்து தேர்தலில் பாஜகவை வீழ்த்தி, ஆளும் காங்கிரஸ் அதிக இடங்களை கைப்பற்றியது. எனினும் பெங்களூரு மாநகராட்சி தேர்தலில் காங்கிரஸ் மண்ணைக் கவ்வும் என கருத்து கணிப்புகள் வெளியாகின.

இதையடுத்து பெங்களூரு மாநகராட்சி தேர்தல் நடத்துவதை கர்நாடக அரசு தள்ளிப் போட்டது. இதற்கு எதிரான வழக்கில் வரும் செப்டம்பர் 2-ம் வாரத்திற்குள் பெங்க‌ளூரு மாநகராட்சி தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனிடையே பெங்களூரு மாநகராட்சியை பிரிப்பது தொடர்பாக முன்னாள் தலைமைச் செயலர் பி.எஸ்.பாட்டீல் தலைமையில் குழு அமைக்கப் பட்டது. 2 மாதங்களுக்கு பிறகு இக்குழு தனது அறிக்கையை சித்தராமையாவிடம் கடந்த திங்கள்கிழமை அளித்தது.

இது தொடர்பாக சித்த ராமையா நேற்று முன்தினம் கூறும் போது, “நிர்வாக வசதிக்காக பெங்களூரு மாநகராட்சியை வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு, மத்திய பெங்களூரு என 5 மாநகராட்சிகளாக பிரிக்க வேண்டும். தற்போதுள்ள 198 வார்டுகளை 400 வார்டுகளாக அதிகரிக்க வேண்டும். 5 மாநக ராட்சிகளின் நிதி ஒதுக்கீடுகளை கவனிக்க `கிரேட்டர் பெங்களூரு ஆணையம்' அமைக்கப்பட வேண்டும் போன்ற பரிந்துரை களை குழு வழங்கியுள்ளது” என்றார்.

அதன்படி பெங்களூரு மாநகராட்சியை பிரித்து, ஆகஸ்ட் இறுதிக்குள் தேர்தல் நடத்த சித்தராமையா திட்டமிட்டுள்ள தாக தகவல் வெளியாகி யுள்ளது.

இதனிடையே பெங்களூரு மாநகராட்சிக்கு தேர்தல் நடத்தா மல் காலம் தாழ்த்துவதாக சமூக ஆர்வலர் முரளிதர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே.முகர்ஜி தலைமையிலான அமர்வு “வரும் 17-ம் தேதிக்குள் பெங்களூரு மாநகராட்சித் தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டும்” என கர்நாடக தேர்தல் ஆணையத் துக்கு உத்தரவிட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

17 mins ago

தமிழகம்

15 mins ago

இந்தியா

34 mins ago

இந்தியா

41 mins ago

இந்தியா

47 mins ago

இந்தியா

54 mins ago

தமிழகம்

47 mins ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்