பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல்: மதச்சார்பற்ற மெகா கூட்டணியில் இடதுசாரிகள் இடம்பெறுவது சந்தேகம்

By பிடிஐ

பிஹாரில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக மதச்சார்பற்ற கட்சிகள் இணைந்து அமைக்க உள்ள மெகா கூட்டணியில் இடதுசாரிகள் இடம்பெறாது என கூறப்படுகிறது. இது அக்கூட்டணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என கருதப்படு கிறது.

கடந்த மக்களவைத் தேர் தலில் பிஹாரில் ராம் விலாஸ் பாஸ்வான் கட்சியுடன் இணைந்து போட்டியிட்ட பாஜக அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து, இந்த ஆண்டு இறுதியில் நடை பெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்ற பாஜக திட்டமிட்டுள்ளது.

நிதிஷ் கட்சியிலிருந்து பிரிந்து தனி கட்சி தொடங்கியுள்ள முன்னாள் முதல்வர் மாஞ்சியும் பாஜக கூட்டணியில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப் படுகிறது. இவரது வருகையில் தலித் வாக்குகள் பெருமளவில் பாஜகவுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் பாஜகவை வீழ்த்துவதற்காக எதிரும் புதிருமாக இருந்த லாலுவும், நிதிஷ் குமாரும் கைகோத்துள்ளனர். லாலு தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தளம், நிதிஷின் ஐக்கிய ஜனதா தளம், காங்கிரஸ் இணைந்து மதச்சார்பற்ற கூட்டணி அமைக்க உள்ளன. இதில் இடது சாரிகளும் இடம் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், இந்தக் கூட்டணியில் இடதுசாரிகள் இடம்பெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இடதுசாரிகள் தனி அணியாக போட்டியிடுவது குறித்து ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இடதுசாரி கட்சிகளில் அதிக வாக்கு வங்கியைக் கொண்டுள்ள சிபிஐ (எம்-எல்) பொலிட்பீரோ உறுப்பினர் பிரபாத் சவுத்ரி கூறும்போது, “மாநில அரசின் கொள்கைகளில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. எனவே, மதச்சார்பற்ற கூட்டணியில் இடதுசாரிகள் இடம்பெறுவதை நாங்கள் விரும்பவில்லை. தனி அணியாக போட்டியிடவே விரும்புகிறோம்” எனஅறார்.

இடதுசாரிகளுக்கு பிஹாரில் 6 முதல் 8 சதவீத வாக்குகள் இருப்பதால் இந்த முடிவு மதச் சார்பற்ற கூட்டணிக்கு பின்ன டைவை ஏற்படுத்தும்.

எனவே, எப்படியாவது இடதுசாரிகளை தங்கள் அணிக்குள் இணைப்பதற்காக ஐக்கிய ஜனதா தளம் முயற்சி செய்து வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

50 mins ago

க்ரைம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

சினிமா

6 hours ago

கல்வி

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

சினிமா

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்