ஸ்மிருதி இரானி கல்வித்தகுதி வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

By பிடிஐ

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியின் கல்வித் தகுதி தொடர்பான வழக்கின் தீர்ப்பை டெல்லி நீதிமன்றம் வரும் 24-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

அமீர் கான் என்பவர் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, தேர் தலின்போது வேட்புமனு தாக்கல் பிரமாண பத்திரத்தில் கல்வித் தகுதி தொடர்பாக தவறான தகவல்களை தாக்கல் செய்திருப்பதாகக் கூறி டெல்லி பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் துள்ளார்.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.கே.மேனன் வாதிடும்போது, “ஸ்மிருதி இரானி, 2004-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் வேட்புமனுவில், டெல்லி பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்ககத்தில் 1996-ம் ஆண்டு பி.ஏ. நிறைவு செய்ததாகக் கூறி யுள்ளார். குஜராத்திலிருந்து மாநிலங்களவைக்கு ஜூலை 2011-ல் போட்டியிடும்போது பி.காம். பகுதி-1 படித்திருப்பதாகத் தெரிவித்துள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அமேதி தொகுதியில் போட்டியிட்ட போது அவர் பி.காம்- பகுதி-1 டெல்லி பல்கலைக்கழக திறந்த வெளி அமைப்பில் படித்ததாகத் தெரிவித்துள்ளார்” எனக் கூறினார்.

வாதங்களைக் கேட்ட நீதிபதி ஆகாஷ் ஜெயின் இம்மனு மீதான தீர்ப்பை வரும் 24-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

சினிமா

27 mins ago

தமிழகம்

31 mins ago

தமிழகம்

34 mins ago

சுற்றுலா

46 mins ago

தமிழகம்

48 mins ago

சினிமா

53 mins ago

கருத்துப் பேழை

1 hour ago

இந்தியா

56 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

14 mins ago

மேலும்