பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்திய வியாபாரிக்கு ரூ.1.9 கோடி அபராதம்: உத்தராகண்ட் உயர் நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

உத்தராகண்ட் மாநிலம் நைனிடா லில் பிளாஸ்டிக் பைகள் பயன் படுத்திய வியாபாரிக்கு ரூ.1.9 கோடி அபராதம் விதித்து அம் மாநில உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

நைனிடால் மலைப் பிரதேச மாகும். அங்கு பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதற்கும், விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில், பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள் ஒவ்வொன் றுக்கும் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று உயர் நீதி மன்றம் கூறியிருந்தது. அதனைத் தொடர்ந்து நைனிடால் மாவட்ட அதிகாரிகள் அந்த உத்தரவை நடைமுறைப்படுத்தத் தொடங்கி யிருந்தனர்.

அதற்குத் தடை விதிக்கக் கோரி கடந்த ஆண்டு டிசம்பரில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் அதனை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதன் காரண மாக அதிகாரிகள் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துபவர்களிடம் இருந்து அபராதம் வசூலித்து வந்தனர். ஆனால் அந்தத் தடையை மீறி பல வியாபாரி கள் தொடர்ந்து பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில், அங்கு பிளாஸ்டிக் பைகள் பயன்படுத் திய வியாபாரி ஒருவருக்கு சமீபத்தில் உயர் நீதிமன்றம் ரூ.1.9 கோடி அபராதம் விதித்துள்ளது. அவருடைய மாத வருமானம் ரூ.12 ஆயிரம் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல மற்றொரு வியாபாரிக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அந்த அபராதத்தை அவர் தன்னுடைய நிலத்தை அடமானம் வைத்து செலுத்தியுள்ளார்.

இவர்கள் இருவரும் தங்களுக்கு விதித்த அபராதத்தை குறைக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தை அணுகினர். ஆனால் அவர்களின் மனுக்களை தள்ளுபடி செய்த நீதிமன்றம், முறையாக அந்த அபராதத் தொகையைச் செலுத்தும்படி உத்தரவிட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

க்ரைம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

மேலும்